ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.
321 ரன்கள் என்ற இலக்கை எட்ட பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடாமல் டெஸ்ட் கிரிக்கெட் போல் ஆடி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக அந்த அணி முதல் 25 ஓவரில் 104 பந்துகளை டாட் பாலாக வீணடித்து இருந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அரையிறுதி வாய்ப்பு கடினம்:
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தற்போது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி இருப்பதால், அரையிறுதி சுற்றுக்கு செல்வது கடினமாகிவிட்டது.
தற்போது நியூசிலாந்து அணி முதலிடத்தில் உள்ள நிலையில் அடுத்த பலம் வாய்ந்த அணியாக இந்தியா இருக்கிறது. இந்திய அணி, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தினாலே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இதனால் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையிலே பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் இனி என்ன செய்யனும்:
இந்த சூழலில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். தற்போது நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும்.
ஒருவேளை இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இதேபோன்று வரும் 27ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இதையும் படிங்க– வெறும் 12 ரன்.. சச்சின் ரெக்கார்டை உடைக்க தயாராகும் ரோஹித்.. டாப் லிஸ்டில் இணைய வாய்ப்பு.. சாம்பியன்ஸ் டிராபி
இதேபோன்று இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற வேண்டும். இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியும் தோல்வியை தழுவ வேண்டும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவை விட பாகிஸ்தான் ரன் ரேட் அதிகமாக இருந்தால் அவர்கள் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
The post CT 2025: நியூஸி மேட்ச் தோல்வி.. பாகிஸ்தான் அணி செமி பைனல் போக என்ன செய்ய வேண்டும்.?. முழு விவரம் appeared first on SwagsportsTamil.