Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...

1 day ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலையான சென்னை மதுரை எக்ஸ்பிரஸ் வே அமைப்பதற்கான பூர்வாங்கப் பணி, அதாவது சாலை அமைப்பதற்கான முதல் பணியான அலைன்மெண்ட் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வாகன நெரிசலை குறைக்க உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள்

ஒரு காலகட்டத்தில், வெளியூர் செல்லும் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய நகரங்களை மட்டும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. கூடுதல் வாகனங்கள் செல்லும் வகையில் அகலமாகவும், 4 வழிச் சாலைகளாகவும், முக்கிய இடங்களில் மட்டுமே எக்ஸிட் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 6,805 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. அதில், 1,677 கிலோ மீட்டர் நீள சாலை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகின்றன.

ஆனால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனங்களும் பெருகிவிட்டதால், நெடுஞ்சாலைகளே போதுமானதாக இல்லாமல் போய்விட்டன. அதைத் தொடர்ந்து வந்ததுதான் 6 வழித்தடங்கள் கொண்ட விரைவுச் சாலைகள். இந்தியாவில், அதிவேக சாலைகள் என அழைக்கப்படும் இந்த சாலைகள், 5,930 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் 26 இடங்களில் பசுமை வழி விரைவுச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது. சென்னையில், எண்ணூர் விரைவுச் சாலை மற்றும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைகள் உள்ளன.

சென்னை-திருச்சி-மதுரை விரைவுச் சாலை

எக்ஸ்பிரஸ் வே எனப்படும் விரைவுச் சாலை நாட்டில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரையை இணைக்கும் பசுமைவழி விரைவுச் சாலை, ரூ.26,500 கோடி மதிப்பீட்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட உள்ளது. இந்த விரைவுச் சாலை, மதுரையில் தொடங்கி, திருச்சி உள்ளிட்ட 5 அல்லது 6 நகரங்களில் மட்டுமே எக்ஸிட்டுகள் கொண்ட சாலையாக சென்னையை வந்தடைய உள்ளது.

சென்னை-திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தாம்பரம் அல்லது சிங்க பெருமாள் கோயிலிலிருந்து இந்த பசுமைவழி விரைவுச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அந்த சாலை மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அலைன்மெண்ட் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சாலை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ முதல் கட்ட பணி இதுதான்.

470 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த சாலையால், மதுரைக்கு 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையிலிருந்து திருச்சிக்கு 3 அல்லது அதிகபட்சமாக 4 மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

Read Entire Article