Champions Trophy : கால்களை பதம் பார்த்த யார்க்கர்கள் - ரோஹித்தை அசர வைத்த பாகிஸ்தான் நெட் பௌலர்கள்

3 days ago
ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிர்த்து இன்று ஆடி வருகிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் பயிற்சி செஷன்களில் பாகிஸ்தானில் பிறந்த இரண்டு பௌலர்கள் நெட் பௌலர்களாக வீசி வருகின்றனர். இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் அவர்களை வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார்.
Rohit Sharma

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி நேற்று முதல் பாகிஸ்தானில் தொடங்கியிருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் துபாயில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஒருமுறை பார்முக்கு வந்துவிட்டால், அடுத்தடுத்து அதிரடியை காட்டுவார்கள். இதனால், சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரோகித் சர்மா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பயிற்சியின் போது பாகிஸ்தானில் பிறந்த நெட் பௌலர் அவாய்ஸ் அகமதுவை ரோகித் சர்மா பாராட்டி பேசியுள்ளார். பயிற்சியின் போது ரோகித் சர்மாவின் கால் விரல்களை நோக்கி வேகமான யார்க்கர் டெலிவரிக்களை அவாய்ஸ் அகமது வீசியுள்ளார். வலை பயிற்சியில் அவருடைய வேகமான பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா “உன்னுடைய யார்க்கர் பந்துகள் சிறப்பாக இருந்தது. எனது கால்களை உடைக்க முயற்சி செய்தாய். இந்த பயிற்சி எனக்கு நன்றாக இருந்தது” என்று அவாய்ஸ் அகமதுவை பாராட்டி பேசியுள்ளார்.

Rohit with Net Bowlers

மேலும் ரோகித் சர்மா இன்னொரு பாகிஸ்தான் நெட் பௌலர் வாசிம் அக்ரம் பற்றியும் பேசி உள்ளார், “அவாய்ஸ் அகமது மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் உண்மையிலேயே நல்ல பௌலர்கள். எங்கள் பேட்டர்களிடம் இருந்து அவர்கள் நன்றாக பௌலிங் செய்வதாக கருத்துக்கள் கிடைத்தது. அவர்களுடன் பேச எங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தது. அதை தவிர எனக்கு அவர்களை பற்றி அதிகம் தெரியாது. நாங்கள் அவர்களை பார்த்தது இதுவே முதல் முறை. அவர்கள் இருவருமே நல்ல தரமான பௌலர்கள்” என்று கூறி உள்ளார்.

பயிற்சியின் போது ரோகித் சர்மாவின் கால் விரல்களை நோக்கி வேகமான யார்க்கர் பந்துகளை வீசியுள்ள அவாய்ஸ் அகமது வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article