ARTICLE AD BOX
CCL 2025: கோப்பையை கோட்டை விட்ட சென்னை ரைனோஸ்.. பஞ்சாப் அணி பக்கா வெற்றி!
மைசூர்: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் முதல் போட்டியிலேயே சென்னை அணி வெற்றியை தவறவிட்டது. அதன் பின்னர் சிறப்பாக ஆடி ஃபைனல்ஸ் வரை வந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தியதும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் ரொம்பவே சுமாரான ஆட்டத்தை ஆடி பஞ்சாப் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஹார்டி சாந்து பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய போட்டியில் விக்ராந்த் டாஸ் வென்று வெற்றியை பெற்ற நிலையில், அதே ரூட்டை பஞ்சாப் அணி இன்று கடைபிடித்து வென்றது.

முதலில் பேட் செய்த சென்னை ரைனோஸ் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரித்வி மட்டுமே சிறப்பாக விளையாடி 23 ரன்கள் எடுத்தார்.
சொதப்பிய சென்னை ரைனோஸ்: செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை ரைனோஸ் அணி ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியது. எந்தவொரு பிரஷரும் இல்லாமல் பஞ்சாப் அணி எளிதில் 2 ஓவர் மீதம் இருக்கும் நிலையிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து கோப்பையை கைப்பற்றியது.
ஃபயராக விளையாடிய பஞ்சாப்: சென்னை அணியை வீழ்த்த வேண்டும் என்கிற வெறியுடன் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக முதல் இன்னிங்ஸிலேயே அடித்து ஆரம்பித்த பஞ்சாப் அணி 2வது இன்னிங்ஸிலும் கொஞ்சமும் சொதப்பாமல் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் நிறுத்தி நிதானமாக விளையாடி அதே சமயத்தில் வைல்டு ஃபயரையும் காட்டி வெற்றியை ருசித்துள்ளது.
கோப்பையை வென்ற பஞ்சாப் அணி: சினிமா நடிகர்களுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பலரும் நிஜ கிரிக்கெட் வீரர்களை போலவே விளையாடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஜியோ ஹாட்ஸ்டாரில் கடைசி போட்டியை சுமார் 5 லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்தனர். 2வது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 75/2 அடித்து வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக அனுஜ் குரானா 40 ரன்களை விளாசினார். சென்னை அணியில் சாந்தனு மட்டுமே கொஞ்சம் சிறப்பாக விளையாடி 22 ரன்கள் அடித்திருந்தார். பாரி 20 ரன்களை அடித்தார். ஆனால், சென்னை அணி வீரர்கள் சிக்ஸர்களுக்கு விளாசினாலே கேட்ச் ஆகி விக்கெட்டுகளை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது தான் இந்த தோல்விக்கு காரணம். பஞ்சாப் அணி கடைசி வரை பட்டாசாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது.