ARTICLE AD BOX
போடு வெடிய.. மீண்டும் அந்த ரூட்டை தேர்ந்தெடுக்கும் சந்தானம்.. பட்டாசா இருக்குமே ப்பா
சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக இங்க நான்தான் கிங்கு படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். இந்தச் சூழலில் சந்தானம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு மட்டும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.
அஜித் - ஷாலினி திருமணம்.. ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்லியிருக்காரு பாருங்க.. வேற லெவல்
டிடி நெக்ஸ்ட் லெவல்: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான்தான் கிங்கு ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமேகூட சந்தானத்துக்கு போதுமான வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
தற்போது அவர் டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இதனை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். கண்டிப்பாக இப்படமாவது தனது ஹீரோ கரியருக்கு பெரிய உதவியாக இருக்கும் எனும் நம்பிக்கையில் அவர் இருக்கிறார். படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு போதுமான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் சந்தானம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கியெழுந்த சமந்தா.. இனி அதிரடிதானாம்.. ரசிகர்கள் குஷி
என்ன தகவல்?: அதாவது அவர் ஹீரோவாக நடித்தாலும் காமெடியனாகவும் வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். சூழல் இப்படி இருக்க சிம்புவை வைத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவிருக்கும் STR 49 படத்தில் சந்தானத்தை காமெடி ரோலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி மும்முரமாக நடந்துவருகிறது என்றும் சொல்லப்படுகிறது. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்புவின் படம் என்பதால் சந்தானமும் ஒத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.