CBSE Board Exams: இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

4 days ago
ARTICLE AD BOX

CBSE Board Exam Latest News: சிபிஎஸ்சி பாடவழி முறையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு முக்கிய செய்தி உள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026 ஆம் கல்வியாண்டில் இருந்து மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CBSE 10th Board Exam

இந்த புதிய முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்தும் வகையில் அமையும். ஓர் ஆண்டில் நடத்தப்படுm இரண்டு பொதுத் தேர்வுகளையும் எழுதுவது மாணவர்களின் விருப்பம் சார்ந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் முதல் முறை எழுதும் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறாத மாணவர்களும், தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்களும் அதே கல்வியாண்டிற்குள் மற்றொரு முறை பொதுத் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

National Education Policy: தேசிய கல்விக் கொள்கை

இந்த புதிய மாற்றம் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் ஒத்திசைந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வுகளின் போது ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுக்க மற்றொரு வாய்ப்பை பெறவும் இது உதவும்.

Union Education Minister Dharmendra Pradhan

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. ‘கூட்டத்தில் பள்ளிக் கல்விச் செயலாளர், CBSE தலைவர், மூத்த அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சகம் மற்றும் CBSE உலகளாவிய பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மாணவர்கள் தேர்வு அழுத்தத்திலிருந்து விடுபடுவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது’ என அமைச்சகத்தின் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு தேர்வுகளும் அவற்றுக்கிடையே ஒரு நிலையான இடைவெளியுடன் திட்டமிடப்படும். இதனால் மாணவர்கள் அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் கிடைக்கும். இந்த மாற்றத்திற்கான வரைவுத் திட்டம் விரைவில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் பிரதான் அறிவித்திருந்தார். தேர்வுக் காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்குவதில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது,” என்று ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்த சீர்திருத்தம் NEP இன் முக்கிய விதிகளை செயல்படுத்துவதில் மற்றொரு முக்கியமான படியாகும். மேலும் மாணவர்களிடையே தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Global Curriculum: 2026-27 ஆம் ஆண்டில் CBSE உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

2026-27 கல்வியாண்டில் CBSE உடன் இணைக்கப்பட்ட 260 வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும் CBSE திட்டமிட்டுள்ளது. பாடத்திட்டம் உலகளாவிய பள்ளி தரநிலைகளுடன் சீரமைக்கப்படும். மேலும், மாணவர்கள் திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு எளிதாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

இரண்டு முறை பொதுத் தேர்வு எழுத முடியும் என்ற புதிய செய்தி மாணவர்களுக்கு நிச்சயமாக நிவாரணம் அளிக்கும். தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளவும், முயற்சிகளை அதிகரித்து அதிக மதிப்பெண்களை பெறவும் இந்த மாற்றம் உதவும். மாணவர்களின் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், தேர்வுக் காலத்தில் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் CBSE -இன் இந்த புதிய மாற்றங்கள் பெரிய வகையில் உதவும்.

மேலும் படிக்க | LIVE இந்தியை ஒழிப்பது கட்டாயம்! டெல்லி முதல்வர் பதவியேற்பு! இந்தியா - பங்களாதேஷ் போட்டி - இன்றைய முக்கிய செய்திகள்!

மேலும் படிக்க | கேஜ்ரிவாலை தோற்கடித்த ப்ரவேஷ் வர்மா... டெல்லி முதல்வராகும் வாய்ப்பை இழந்தது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article