Career Guidance: இன்டர்வியூவில் `Sorry' கேட்காதீங்க... இன்டர்வியூவை எப்படி அணுக வேண்டும்..?

6 hours ago
ARTICLE AD BOX

ஒரு இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்... உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? திக் திக்...பக் பக் என்று தானே இருக்கும். அப்படி இருந்தால் முதலில் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். 'இந்த வேலை எனக்கு தான்' என்ற நம்பிக்கையை கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நேர்காணல் அறைக்குள் நுழையும்போது இயற்கையான புன்னகையுடன் செல்லுங்கள். நேர்காணல் செய்பவரை நேருக்கு நேர் பாருங்கள். நீங்கள் அவரை நேருக்கு நேர் பார்க்கவில்லை என்றால் உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் எடுத்துக்கொள்வார்.

இன்டர்வியூவை அணுகுவது எப்படி?!

ஒருவேளை நேர்காணலில் உங்களுக்கு தெரியாத கேள்விகளை கேட்டால் 'தெரியாது' என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். அதற்கு பதிலாக, "எனக்கு புது புது விஷயங்களை கற்றுக்கொள்ள மிகவும் பிடிக்கும். அதனால், இதை நான் சீக்கிரம் கற்றுக்கொள்கிறேன்" என்று பாசிட்டிவாக பதில் அளியுங்கள்.

நேர்காணலில் தவறாக பதிலளித்துவிட்டாலோ, பதற்றத்தில் எதாவது தவறாக செய்துவிட்டாலோ டக்கென 'சாரி' கேட்டுவிடாதீர்கள். அது உங்கள் பற்றிய பிம்பத்தை அவருக்கு ஏற்படுத்திவிடும். அந்த சூழ்நிலையை நம்பிக்கையுடன் கையாளுங்கள்.

நேர்காணலில் உங்களுடைய ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும் 'நீங்கள் இந்த வேலைக்கு 100 சதவிகிதம் தகுதியானவர்' என்பதுப்போல இருக்க வேண்டும்.

அப்புறம் என்ன... அந்த வேலை உங்களுக்கு தான்!

குறைந்துவிட்ட கேம்பஸ் இன்டர்வியூ... எப்போது நிலைமை மாறும்?

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article