BSNL-னா சும்மாவா.. ரூ.400 க்கு 1400GB டேட்டா.. கிராமத்தில் இருந்தால் ரூ.250 தான்.. Jio, Airtel-க்கு டாட்டா!

22 hours ago
ARTICLE AD BOX

BSNL-னா சும்மாவா.. ரூ.400 க்கு 1400GB டேட்டா.. கிராமத்தில் இருந்தால் ரூ.250 தான்.. Jio, Airtel-க்கு டாட்டா!

News
oi-Muthuraj
| Published: Sunday, March 16, 2025, 21:36 [IST]

இந்தியாவில் உள்ள 3 முக்கிய இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர்கள்கள் (ISPs) ஆன ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகியவைகளின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான வைஃபை திட்டங்கள் அல்லது பிராட்பேண்ட் திட்டங்களை பற்றிய தொகுப்பே இது.

இந்த 3 நிறுவனங்கலுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 க்கும் குறைவான விலையில் வைஃபை அல்லது பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகின்றன. ரூ.500 க்குள் என்பது மாதாந்திர விலை ஆகும். உங்களிடம் இன்னும் அதிகமான பட்ஜெட் இருந்தால், நீங்கள் நீண்ட கால திட்டங்களையும் தேர்வு செய்யலாம்; இதன்கீழ் இந்த நிறுவனங்களிடமிருந்து சில கூடுதல் தள்ளுபடிகளும் கிடைக்கும்.

BSNL-னா சும்மாவா.. ரூ.400 க்கு 1400GB டேட்டா!

இன்றைய தேதிக்கு ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான வைஃபை திட்டம்: ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான வைஃபை திட்டம் மாதத்திற்கு ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் (பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம்) என்கிற இண்டர்நெட் ஸ்பீட் உடன் வருகிறது. நீங்கள் ஃபைபர் திட்டத்தை தேர்வுசெய்தால், இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டா கிடைக்கும்.

இன்றைய தேதிக்கு பார்தி ஏர்டெல்லின் மலிவான வைஃபை திட்டம்: பார்தி ஏர்டெல்லின் மலிவான வைஃபை திட்டம் ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 40 எம்பிபிஎஸ் வரை (பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம்) என்கிற இண்டர்நெட் ஸ்பீட் உடன் வருகிறது. நீங்கள் ஃபைபர் திட்டத்தை தேர்வுசெய்தால் இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டா கிடைக்கும்; ஏர்ஃபைபருடன் 1டிபி மாதாந்திர டேட்டா கிடைக்கும்.

இன்றைய தேதிக்கு பிஎஸ்என்எல்-ன் மலிவான வைஃபை திட்டம்: அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது மாதத்திற்கு ரூ.249-க்கு அதன் மலிவான பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் 25 எம்பிபிஎஸ் ஸ்பீட் மற்றும் 10ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 10ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் இன்டர்நெட் ஸ்பீட் 2 எம்பிபிஎஸ் ஆக குறைகிறது. இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.399 திட்டத்தை மலிவான விருப்பமாக வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் ரூ.399 திட்டமானது 30 எம்பிபிஎஸ் ஸ்பீட் மற்றும் 1400ஜிபி மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இந்தத் திட்டத்தில் லேண்ட்லைன் இணைப்பும் வழங்கப்படுகிறது, ஆனால் இந்த சேவைகளை கருவிகளை பயனர் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்திய டெலிகாம் துறையின் மற்ற அப்டேட்களை பொறுத்தவரை, சமீபத்தில் ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் சத்தம் இல்லாமல் - ரூ.100 க்கு புதிய ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்தது. ரூ.100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜியோ ரீசார்ஜ் ஆனது ஒரு டேட்டா-ஒன்லி பிளான். இது மொத்தம் 5ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். ஆனால் 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இது ரூ.149 க்கு கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை போல் மொபைல்-ஒன்லி சந்தா கிடையாது. அதாவது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி கன்டென்ட்களை மொபைல் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்கிற கட்டுப்பாடு ரூ.100 திட்டத்தில் இல்லை.

மாறாக இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய இரண்டிலும் 1080பி வரையிலான ரெசல்யூஷனின் கீழ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். இதேபோன்ற நன்மைகளை தான் - ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டமும் வழங்குகிறது. ஆனால் அந்த சந்தாவின் விலை ரூ.299 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் ரூ.100 டேட்டா பிளானின் கீழ் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது முற்றிலும் லாபகரமான தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Cheapest WiFi Plans in India Jio Rs 399 Vs Airtel Vs 499 Vs BSNL Rs 249 and Rs 399
Read Entire Article