ARTICLE AD BOX
BSNL-க்கு கியூ கட்டுது.. இனிமே 365 இல்ல.. 425 நாட்கள் வேலிடிட்டி.. மாதம் ரூ.171-க்கு இறக்கிய புதிய ரீசார்ஜ்!
மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான திட்டத்தை களமிறங்கி இருக்கிறது. மாதத்துக்கு ரூ.171 செலவில் 425 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. 14 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் கிடைத்தால் டெலிகாம் கஸ்டமர்கள் கூட்டம் கூட்டமாக பிஎஸ்என்எல்லுக்கு மாறாமல் என்ன செய்வார்கள்? இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்காக (BSNL 4G Service) பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கிவிட்டன. ஆனால், ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதே அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன.

இதனால், செகண்டரி சிம் கார்டாக பிஎஸ்என்எல்லை பயன்படுத்தும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் அடித்து தூக்கும்படியான வேலிடிட்டியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு திட்டத்தில் கொடுக்கிறது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் அதிகபட்சம் 365 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த நாட்களில் தினசரி டேட்டா இருந்தால், அதன் விலை ரூ.3,599 விலைக்கு தொடங்குகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனம் அதை வெறும் ரூ.2,399 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கிறது. அதிலும் கூடுதலாக 425 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்து கண்ணை மூடிக்கொண்டு பிஎஸ்என்எல்லுக்கு மாறும்படி சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் விவரங்கள் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 365 நாட்களுக்கு மேல் 60 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த 14 மாதங்களில் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் (Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) சலுகைகள் கிடைக்கிறது.
ஆகவே, இந்த வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் 425 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். ஆகவே, 425 நாட்கள் முழுவதும் உங்களுக்கு சிம் கார்டு ஆக்டிவ் (SIM Card Active) சலுகை கிடைக்கிறது. டேட்டாவும் தினசரிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) சலுகை கிடைக்கிறது. ஆகவே, ஒரு நாளுக்கு ஒதுக்கப்பட்ட 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதை வருடத்துக்கு மேலும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதற்கு அடுத்து எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது.
ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை 425 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 395 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது. ஆனால், இப்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு 425 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மார்ச் 31ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கொடுக்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்துக்கான மாத செலவை கணக்கிட்டால் வெறும் ரூ.171ஆக மட்டுமே இருக்கிறது. அதாவது, 14 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த மாதங்களுக்கு ரூ.2,399 விலையை வகுத்தால், இந்த அடிமட்ட விலைக்கு திட்டம் கிடைப்பது தெரிகிறது. இந்த விலைக்கு தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களுடன் சலுகை கிடைப்பது, நல்ல லாபத்தை தரக்கூடியதாகும்.