ARTICLE AD BOX

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பொதுவாக அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மேலும் இன்று அனைத்து பள்ளிகளும் வெள்ளிக்கிழமை அட்டவணையின் படி பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.