கேன் வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்! உணவு பாதுகாப்பு துறை கொடுத்த அறிவுறுத்தல்

5 hours ago
ARTICLE AD BOX

கேன் வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்! உணவு பாதுகாப்பு துறை கொடுத்த அறிவுறுத்தல்

Health
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்த கூடாது என்றும், கீறல் விழுந்த, அழுக்கடைந்த கேன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம் எனவும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒரு காலத்தில் சென்னையில் மட்டும் கொடி கட்டி பறந்த கேன் வாட்டர் பிசினஸ் இன்று குக்கிராமங்களிலும் பரவலாகியிருக்கிறது. இந்நிலையில் கேன் வாட்டர்களால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளை பற்றி உணவு பாதுகாப்புத் துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

chennai tamil nadu health

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமை தாங்கியிருந்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கேன் வாட்டர் பயன்பாடு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். குறிப்பாக குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்த கூடாது, கீறல் விழுந்த அழுக்கடைந்த கேன்களை பயன்படுத்த வேண்டாம், நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டிருக்கும் கேன்களில் உள்ள குடிநீரை பயன்படுத்த கூடாது, குடிநீர் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்று அவர் கூறியிருந்தது மிகுந்த கவனம் பெற்றிருந்தது.

அடுத்து வரும் வாரங்களில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் அடுத்தடுத்து சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் ஒவ்வொரு நாளும் சுமார் 1100 மில்லியன் லிட்டர் தண்ணீர் 'சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால்'(CMWSSB) விநோகிக்கப்படுகிறது.

மாநராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீருக்கு நீர் தேக்கங்களும், நிலத்தடி நீரும், கடல் நீரும் ஆதாரமாக இருக்கிறது. நீர் தேக்கங்களை பொறுத்த அளவில் செம்பரம்பாக்கம், செங்குன்றம், புழல் போன்ற ஏரிகள் நீராதாரமாகவும், நிலத்தடி நீரை பொறுத்தவரை தாமரைப்பாக்கம், மீஞ்சூர் போன்ற பகுதிகளில் உள்ள குழாய்க்கிணறுகளும், கடல் நீரை பொறுத்தவரை நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நீராதாரமாக இருக்கின்றன.

ஆனால் தனியார் குடிநீர் விற்பனையாளர்கள் பெரும்பாலும் நிலத்தடி நீரைத்தான் நம்பியிருக்கின்றனர். ஆழ்த்துளை கிணறுகளை அமைத்து அதன் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து அதை தூய்மைப்படுத்தி கேன்களில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இந்த RO, UV (Ultraviolet), மற்றும் ஓசோன் சுத்திகரிப்பு மூலம் நிலத்தடி நீர் தூய்மைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதில் கனிம உப்புகள் குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல இவை பிளாஸ்டிக் கேன்களில் விநியோகிக்கப்படுகின்றன என்பதுதான் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. கேன் வாட்டரில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. இந்த துகள்கள் உடலில் நுழைந்தால் கேன்சர் போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவேதான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குடிநீர் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும், கீறல் விழுந்த அழுக்கடைந்த கேன்களை தவிர்க்குமாறும் வலியறுத்தியுள்ளது.

மிக குறிப்பாக, நேரடி வெயிலில் வைக்கப்படும் கேன்கள் பிளாஸ்டிக் சிதைவுக்கு உள்ளாகிறது. இதனால், அந்த குடிநீரில் துகள்கள் கலக்கின்றன. ஆகவேதான நேரடி சூரிய ஒளியில் உள்ள பிளாஸ்டிக் கேன்களை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீங்கள் கேன் குடிநீரை பயன்படுத்துகிறீர்களா? அதை பாதுகாப்பானதாக உணர்கிறீர்களா? கமென்ட்டில் பகிருங்கள்.

More From
Prev
Next
English summary
Drinking water cans should not be used more than 50 times, and scratched or contaminated cans should not be reused repeatedly, according to Food Safety Department officials.
Read Entire Article