ARTICLE AD BOX

கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன். இவர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது அம்மன் அர்ஜுனன் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த வழக்கின் எதிரொலியாக தான் தற்போது அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் காலையிலேயே எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.