Breaking: தமிழக டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்… அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை…!!

18 hours ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சென்னையில்உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மூன்று நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது அமலாக்கத்துறை அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சோதனையின் முடிவில் ஏராளமான ரொக்க பண மற்றும் ஆவணங்கள் போன்றவைகள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உட்பட 25 இடங்களில் கடந்த 6-ம் தேதி சோதனை நடைபெற்றது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாம். அதோடு பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சோதனையின் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Read Entire Article