ஊட்டி அருகே தேயிலை பறிக்க சென்ற அஞ்சலை.. காட்டில் கண்ட காட்சி.. ஆடிப்போன ஊர் மக்கள்

13 hours ago
ARTICLE AD BOX

ஊட்டி அருகே தேயிலை பறிக்க சென்ற அஞ்சலை.. காட்டில் கண்ட காட்சி.. ஆடிப்போன ஊர் மக்கள்

Tamilnadu
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பேரார் பொம்மன் நகரை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி அஞ்சலை, நேற்று முன்தினம் காலிபெட்டா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்க சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை அஞ்சலையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேயிலை தோட்டம் உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்குமே இல்லை. கடைசியில் அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க மலைப்பகுதிகளையும் வனப்பகுதிகளையும் கொண்ட மாவட்டம் என்றால் அது நீலகிரி மாவட்டம் தான். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை கடந்த உடனேயே ஆரம்பித்துவிடும். உதகை, குன்னுர், கோத்தகிரி, கூடலூர், குந்தா, பந்தலூர் என ஐந்து முக்கிய பகுதிகளாக உள்ளன.

the Nilgiris Ooty

நீலகிரியில் முக்கிய தொழிலாக இருப்பது தேயிலை உற்பத்தி தான். எங்கு திரும்பினாலும் தேயிலை தோட்டங்களை காண முடியும். அதேநேரம் கூடலூர் பகுதியில் குறுமிளகு, ஏலக்காய், இஞ்சி மற்றும் காப்பித் தோட்டங்கள் அதிகமாக இருக்கும். சுற்றுலா தொழில் தான் தற்போது பலருக்கு மிகப்பெரிய வருவாய் தரும் தொழிலாக உள்ளது.

பெரும்பாலும் வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாக நீலகிரி இருப்பதால் வனவிலங்குகளும் அதிகமாக உள்ளன. புலி, சிறுத்தை, யானை, கரடி, பாம்புகள், காட்டு மாடுகள், நரிகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் இங்கு அதிக அளவில் வசிக்கின்றன. இதில் யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் ஊட்டி அருகே தேயிலை பறிக்க தோட்டத்திற்கு சென்ற பெண், சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பேரார் பொம்மன் நகரில் கோபால் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலை (வயது 50). இவர் நேற்று முன்தினம் காலிபெட்டா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அஞ்சலை மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை அஞ்சலையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேயிலை தோட்டம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியிருக்கிறார்கள் ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை காலிபெட்டா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தின் ஓரிடத்தில் கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை கடித்து படுகாயம் ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் இறந்து பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனே ஊட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக கிடந்தது அஞ்சலை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
English summary
Anjalai, the wife of Gopal, a resident of Perar Bomman town near Ooty in the Nilgiris district, went to pluck tea in the tea garden in the Kalipetta area the day before yesterday. What happened to her?
Read Entire Article