ARTICLE AD BOX
அரசு அதிகாரிகளை அவதூறாக பேசிய மா.செ பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார்.
தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தர்மச்செல்வன், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதாவது, இனி மாவட்டத்தில் நான் தான். என்னைக்கேட்காமல் எந்த அரசு அதிகாரியும் செயல்படக்கூடாது.
மிரட்டல் பேச்சு
ஆட்சியர், எஸ்.பி என அனைவரும் நான் சொல்வதையே கேட்க வேண்டும். நான் சொல்வதை கேட்காதவர்களுக்கு, எனது லெட்டர் பேடில் தலைவருக்கு எழுதிக்கொடுத்தால், அவர்கள் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள் என கூறி இருந்தார்.இந்த விஷயம் சர்ச்சையானது.
இதையும் படிங்க: #Breaking: நாவடக்கம் தேவை.. நீங்கள் மன்னனா? - மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கண்டனம்.!
தலைமை அதிரடி
இந்நிலையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தர்மச்செல்வன், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக இனி கிழக்கு மாவட்ட செயலாளராக ஆ. மணி செயல்படுவர் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, திமுக மா.செ தர்மச்செல்வன், அரசு அதிகாரிகளை அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை ஆடியோ
#BREAKING || ஆட்சியருக்கு திமுக மா. பொறுப்பாளர் மிரட்டல் #Dharmapuri #DMK #Threat #DistrictCollector #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/JELCP1zwk0
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) February 28, 2025இதையும் படிங்க: #Breaking: நீ நாசமா போவ, என் கண்ணீர் உன்னை சும்மா விடாது - நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு குமுறல்.!