ARTICLE AD BOX

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கோடைநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அது முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 10 பேரை நேரடியாக அழைத்து வாக்குமூலம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. ஆனால் கடந்த முறை அவர் நேரில் ஆஜாராகாத நிலையில், தற்போது அவர் கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.