#Breaking: ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் வெட்டிக்கொலை; நெல்லையில் பதற்றம்.!

13 hours ago
ARTICLE AD BOX

 

திருநெல்வேலி மாநகர பகுதியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன். இவர் முன்னாள் தலைமை காவலர் ஆவார். தற்போது தனது பகுதியில் உள்ள மசூதியில் வேலை பார்த்து வருகிறார். 

வெட்டிக்கொலை

இதனிடையே, இன்று அதிகாலை அவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ஜாகிர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!

காவல்துறை விசாரணை

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்னாள் தலைமை காவலர் ஜாகிர் உசேனுக்கும், பக்கத்தில் வசித்து வருபவருக்கும் இடையே நீண்டகால நிலத்தகராறு இருந்தது தெரியவந்தது.

இதனால் தலைமறைவான நபர்களை கைது செய்யும் பணியில் அதிகாரிகள் களமிறங்கி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: 1095 பேர் சாதிய வன்கொடுமையால் பாதிப்பு.. ரூ.11 கோடி நிவாரணம்.. - இது நெல்லை ரிப்போர்ட்.!

Read Entire Article