ARTICLE AD BOX

ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா மற்றும் புச் வில்மோர் ஆகிய இருவரும் அவர்களது குழுவுடன் விண்வெளியிலிருந்து திரும்பினர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோருக்கு சட்டப்பேரவை கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்த அடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.