பெட்டிங் செயலியை விளம்பரத்தியதால் சிக்கல்

தெலங்கானா : விதிகளை மீறி பெட்டிங் ஆப்களை ப்ரோமோட் செய்த காரணத்திற்காக ரானா டகுபதி , விஜய் தேவரகொண்டா , மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட 25 தெலுங்கு நடிகர்கள் மீது தெலங்கானா காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா இவர்களிம் மேல் புகாரளித்துள்ளார்.

25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு

தனது தெருவில் உள்ள இளைஞனிடம் பேசியபோது பிரபலங்கள் விளம்பரப் படுத்திய பெட்டிங் செயலிகளில் பணத்தை முதலீடு செய்ததாக தெரிவித்ததாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு பிரபலங்கள் விதிகளை மீறி இந்த செயலிகளை விளம்பரப் படுத்துவதாகவும் இதனால் பணத் தேவை உள்ளவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரானா டகுபதி , பிரகாஷ் ராஜ் , விஜய் தேவரகொண்டா இன்ன பிற சமூக ஊடக பிரபலங்களின் மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதி செய்துள்ளது.