ARTICLE AD BOX
வெளியில் செல்லும் பெண்கள் தன்னுடைய அழகை இன்னும் அதிகரிப்பதற்காக மேக்கப் போடுவார்கள்.
தற்போது இருக்கும் அதிகமாக மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்துகிறார்கள். இப்படி அழகை மேம்படுத்திக் காட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்ஷை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும். இதனை சரும நல மருத்துவர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.
அந்த வகையில், முகத்திற்கு தினமும் பயன்படுத்தும் Makeup brush-ஐ எப்படி பராமரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Makeup brush-ஐ எப்படி பராமரிக்கலாம்?
1. க்ரீம், பவுண்டேஷன், பவுடர் ஆகியவற்றை முகம் முழுவதும் பூசுவதற்கு ஏற்ற வகையில் மேக்கப் பிரஷ் பயன்படுத்துவோம். அதிலுள்ள இழைகள் மிதமான அடர்த்தியோடு மென்மையாக இருப்பது அவசியம். அதன் இழைகள் இயற்கையாக கிடைக்கும் ரோமங்களால் தயாரிக்கப்படுகின்றவை. இவற்றை மென்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
2. மேக்கப் பிரஷ் பயன்படுத்திய பின்னர் ஒரு முறை சுத்தம் செய்து விட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாரத்திற்கு ஒரு முறையாவது, தண்ணீரால் கழுவ வேண்டும்.
3. தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைக்க வைக்கக் கூடாது. மேக்கப் பிரஷ்ஷை கழுவிய பிறகு, அவற்றை ஒரு பருத்தி துணியால் துடைக்க வேண்டும். அல்லது டிரேவில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
4. மேக்கப் பிரஷ்களை அடுக்கி வைக்கும் ஹோல்டர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்வதற்கு என தனி பிரஷ் கிளீனர்கள் உள்ளன. அதனால் பிரஷ்களில் உள்ள அழுக்குகளையும், பிசுபிசுப்பு தன்மையையும் முழுமையாக நீக்க முடியும்.
5. இழைகளை சுத்தம் செய்வதற்கு என தனி ”பிரஷ் மேட்” கடைகளில் உள்ளன. அதனை வாங்கி அதில், பிரஷ்ஷில் படிந்துள்ள க்ரீம் மற்றும் பிசுக்குகளை முழுமையாக நீக்க முடியும்.
6. மேக்கப் பிரஷ்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தினமும் மேக்கப் போடுபவர்கள் தனி பிரஷ்கள் வைத்து கொள்வது அவசியம். சில அழகு சாதனப் பொருட்கள் ஒவ்வாமையை எற்படுத்தும். அதோடு நாம் மற்றவர்களுக்கு பயன்படுத்தும் பொழுது அந்த தொற்று அவர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |