ASTRO (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 25, சென்னை (Chennai News): எண்ணமும்,செயலும் நன்றாக இருக்கும் பொழுது மட்டுமே ஒரு மனிதன் மனதிடத்தோடு செயல் செய்ய முடியும். மனதிடத்தோடு செயல் செய்துவிட்டால் மட்டும் வெற்றி கிட்டுமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு மனிதனின் லக்னம், லக்னாதிபதி வலுவாக இருந்து அவருக்கு நடக்கும் தசா புக்திகளும் தொடர்ந்து யோக தசா புக்திகளாகவே இருந்தால் மட்டுமே அவர் வாழ்நாள் சாதனையாளர் ஆகிறார். யோக தசைகள் வராமல் தொடர்ந்து ஆறு,எட்டு மற்றும் அவயோக தசைகள் வரும்பொழுது அவர் என்னதான் உழைத்தாலும் அவரால் தோல்விகளையே சந்திக்க நேர்கிறது. Astrology: புனர்பூ தோஷம் யாருக்கு நன்மை செய்யும்? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

ஜோதிடத்தின் பங்கு:

கோட்சாரத்தில் கூடுதலாக ஏழரை, அஷ்டமத்து சனி காலங்களில் கூடுதல் கஷ்டங்களை சந்தித்து லக்னம்,லக்னாதிபதி வலுவாக இருப்பதினால் எதையும் சமாளித்துக் கொண்டிருக்கும் மனிதராகவே அவர் இருக்கிறார். ஒருவருக்கு வரும் தாமத வெற்றி என்பது தொடர்ந்து அவருக்கு அவயோக தசைகள் நடந்து ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் அதிக சுபத்துவமான தசைகளோ அல்லது யோக தசைகளோ அந்த மனிதருக்கு வரும் பொழுது அவர் சிறு வயதில் கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் பின்னர் அவருடைய துறையில் கண்டிப்பாக வெற்றி பெற்று மனமகிழ்வோடு இருப்பார். ஆகவே ஒரு மனிதனின் வெற்றி,தோல்வி என்பது அவரின் ஜனன கால ஜாதக அவயோக, யோக தசைகளை பொருத்தது மட்டுமே என்பது உண்மை.