Ashwin: "என் 100வது டெஸ்ட்டுக்கு தோனியை அழைத்தும் வரவில்லை; ஆனால்..." - சுவாரஸ்யம் பகிரும் அஷ்வின்

15 hours ago
ARTICLE AD BOX

'Leo - The Untold Story Of Chennai Super Kings' என்ற புத்தகத்தைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று ஒரு தனியார் ஹோட்டலில் நடந்திருந்தது. விழாவில் இசையமைப்பாளர் அனிருத், கிரிக்கெட் வீரர் அஷ்வின், முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்திருந்தனர்.

இந்நிகழ்வில் அஷ்வின் பேசுகையில், "தோனியை என்னுடைய 100 வது போட்டியில் நினைவுப்பரிசு வழங்க அழைத்தேன். அவரால் அப்போது வர முடியவில்லை. ஆனால், இப்போது அதை விடப் பெரிய பரிசைக் கொடுத்துவிட்டார்" எனப் பேசியிருக்கிறார்.

Anirudh

நிகழ்வில் அனிருத் பேசுகையில், "அஷ்வின் என்னுடைய பள்ளி சீனியர். அஷ்வின் ஓய்வை அறிவித்தபோது நானும் வருத்தமுற்றேன். என்னுடைய அக்கா வெளிநாட்டில் இருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர். அவரை அலுவலகத்தில் விடச் செல்கையில் பி.எஸ்.ராமன் சாரைப் பார்ப்பேன். எப்போதும் அலுவலகத்திலேயே இருப்பார். புத்தகம் எழுதும் அளவுக்கு அவருக்கு நேரம் இருந்தது ஆச்சரியம்தான். அவருக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்கும் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும். ஆல் தி பெஸ்ட் சிஎஸ்கே. விசில் போடு!" என்றார்.

ஸ்ரீகாந்த் பேசுகையில், "சென்னை அணியில் தோனி என்னை விட இரண்டு மாதங்கள் ஜூனியர். என்னைத்தான் முதலில் விளம்பரத் தூதராக நியமித்தார்கள். அதன்பிறகுதான் தோனி கேப்டன் ஆக்கப்பட்டார். வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் கில் கிறிஸ்ட்டுக்கு எதிராக அஷ்வினை முதல் ஓவரில் வீச வைத்தார் என நினைக்கிறேன். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் எழுச்சி அங்கேதான் தொடங்கியது. அஷ்வின் டி20-யிலிருந்து ஓடிஐ பௌலரானார். ஓடிஐயிலிருந்து டெஸ்ட் பௌலரானார். அவர் பரிணமித்துக் கொண்டே இருந்தார். இப்போது பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்றார்.

Ashwin

கடைசியாக அஷ்வின் பேசுகையில், "என்னுடைய 100 வது டெஸ்ட் போட்டிக்கு நினைவுப் பரிசை வழங்க தோனியை அழைத்தேன். அப்போது அவரால் வர முடியவில்லை. ஆனால், இப்போது மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து வந்து மறக்க முடியாத பரிசை அளித்துவிட்டார்" என்றார்.

Ashwin: "பிசிசிஐ தேர்வுக்குழுவின் தலைவராக நான் போவேனா?" - அஷ்வின் சொல்வதென்ன?

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article