IPL 2025 | Drugs Banned Advisory (Photo Credit: Pixabay / Wikipedia)

மார்ச் 10, புதுடெல்லி (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டிகள், மார்ச் 22, 2025 அன்று முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் ஜெயிண்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் 90+ ஆட்டங்கள், கிரிக்கெட் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றனர். மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் 18 வது டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025), மே 25, 2025ல் நிறைவு பெறுகிறது. ஐபிஎல் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர களப்பயிற்சியை தொடங்கிவிட்டது. IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.! 

சுகாதார சேவைகளின் இயக்குநர் கடிதம்:

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதார சேவை இயக்குனர் அதுல் கோயல் (Director General of Health Services), ஐபிஎல் தலைவர் (IPL Chairman) அருண் தும்முல்-க்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், ஐபிஎல் 2025 முதல் இனி வரும் ஐபிஎல் சீசன் போட்டிகளில், மது, சிகிரெட் உட்பட எந்த போதை வஸ்துவைக்கும் ஊக்குவிக்கும் விளம்பரங்கள், எந்த ஒரு வரையிலும் இடம்பெற்று இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு இளைஞர்களை ஊக்குவிக்க பயன்படுகிறது எனினும், அதன் பேரில் போதை வஸ்துக்களின் விளம்பரத்தை ஊக்குவிப்பது நல்லதல்ல. ஆகையால், ஐபிஎல் போட்டியில் போதை பொருட்களின் விளம்பரங்கள் தடை செய்யப்படுகிறது. IPL Schedule PDF Download: ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை பிடிஎப் பைல் பதிவிறக்கம் செய்வது எப்படி? விபரம் உள்ளே.! 

போதைப்பொருட்களால் மரணம்:

போட்டியில் பங்கேற்கும் அணிகள், அவர்களின் விளம்பர யுக்திகளில் மேற்கூறிய விதிகளை செயல்படுத்திட வேண்டும் எனவும் அரசின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கேன்சர், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் சிக்கும் 70% மக்களின் உயிரும் பறிபோகிறது. ஆதலால், போதைப்பொருள் ஆபத்து தொடர்பான விழிப்புணர்வுகளை படுத்த, ஐபிஎல் போட்டியில் இருந்து போதைப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.