ARTICLE AD BOX
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா அரை இறுதியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2023 உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
அப்படியே நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் நன்றாக விளையாடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதையும் சேர்த்து சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் இந்தியா 34 போட்டிகளில் 23 வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது.
டாஸ் கிடைக்கல்லன்னா என்ன:
3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. இந்தியாவை தவிர்த்து உலகில் வேறு எந்த அணியுமே சாம்பியன்ஸ் கோப்பையில் 15 வெற்றிகளைக் கூட பெற்றதில்லை. இவற்றை விட கடைசியாக விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்து மோசமான உலக சாதனை படைத்ததை ரசிகர்கள் அறிவார்கள். குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா 5 போட்டிகளிலும் ஒருமுறை கூட டாஸ் வெல்லவில்லை.
இருப்பினும் 5 போட்டிகளிலும் தங்களுடைய திறமையால் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றி பெற்று கோப்பையையும் முத்தமிட்டது. இதன் வாயிலாக ஒரு ஐசிசி ஒருநாள் தொடரில் ஒருமுறை கூட டாஸ் வெல்லாமலேயே கோப்பையை வென்ற முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் உலகில் வேறு எந்த அணியும் ஒரு ஐசிசி ஒருநாள் தொடரில் (உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி) ஒரு டாஸ் கூட வெல்லமால் கோப்பையை வென்றதில்லை.
கோட்டையாக மாறிய துபாய்:
இது போக துபாயில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 11 போட்டிகளில் வென்றுள்ளது. அதில் 10 வெற்றிகளை பதிவு செய்திருந்த இந்தியா ஒரு போட்டியை சமன் செய்துள்ளது. ஒரு முறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட மைதானத்தில் தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
இதையும் படிங்க: நோ ரூமர்ஸ் ப்ளீஸ்.. ஓய்வு குறித்த வதந்திக்கு ஷார்ட்டாக முற்றுப்புள்ளி வைத்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ
இதற்கு முன் நியூசிலாந்தில் உள்ள டுனிடின் மைதானத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்காமல் 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த சாதனையை தற்போது இந்தியாவும் சமன் செய்துள்ளது. அந்த வகையில் சாதகம் இருப்பதாக எதிரணியினர் விமர்சித்த துபாய் மைதானம் தற்போது இந்தியாவின் கோட்டையாக மாறியுள்ளது.
The post 5க்கு 5.. டாஸ் அதிர்ஷ்டம் இல்லனா என்ன? துபாயை கோட்டையாக்கி.. ஐசிசி தொடரில் இந்தியா உலக சாதனை appeared first on Cric Tamil.