ARTICLE AD BOX
Ajith Good Bad Ugly Break Vijay Movie Record: அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று வெளியான 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் டீசர் அசால்ட்டாக தளபதி விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை முறியடித்துள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன 'விடாமுயற்சி' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்த திரைப்படம், ரசிகர்களின் 2 வருட காத்திருப்புக்கு பின்னர், வெளியான போதும் ஒரு சில காரணங்களால் கலவையான விமர்சனங்களுடன் தோல்வியை தழுவியது.

வசூல் ரீதியாகவும் 'விடாமுயற்சி' திரைப்படம் ரூ.175 கோடி மட்டுமே வசூலித்தது. 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆகி 1 மாதம் ஆகிவிட்ட நிலையில், மார்ச் 3-ஆம் தேதி ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. எனவே திரையரங்கில் 'விடாமுயற்சி' வெற்றியை தவறவிட்டாலும், ஓடிடியில் சாதனை படைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம் சில படங்களுக்கு ஆரம்பத்திலேயே எழும் நெகட்டிவ் விமர்சனங்கள் அந்த படத்தின் வசூலை பெரிதும் பாதித்தாலும், பின்னர் ஓடிடியில் வெளியாகும் போது ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகின்றன. அந்த லிஸ்டில் விடாமுயற்சி இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, அஜித் தெறி மாஸ் கெட்டப்புகளில் நடித்துள்ள 'குட் பேட் அக்லீ' படத்தின் டீசர் நேற்று வெளியானது. அஜித் ஒரு கெட்டப்பில் அல்ல பல கெட்டப்புகளில் டீசரில் தோன்றி மிரள வைத்தார். இந்த படத்தின் டீசரில் அஜித் இதற்க்கு முன் நடித்த பல கெட்டப்புகளில் வருவதோடு, இந்த படத்தில் பல படங்களின் காட்சிகள் காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகத்தையும் எழ வைத்தது.

ஆதி கவிச்சந்திரன் இயக்கி உள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்தது நடிகை திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்திலும் நடித்துள்ளார். மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் 63 வது திரைப்படம் ஆக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், சுமார் 245 கோடி முதல் 275 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளது.

தற்போது 'குட் பேட் அக்லீ' படத்தின் டீசர் தளபதி விஜய் படத்தின் சாதனையை முறியடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. நேற்று மாலை வெளியான 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் டீசர் 15 மணி நேரத்தில் 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னர் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர், 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், இதனை அசால்டாக 'குட் பேட் அக்லீ' நெருங்கி விட்டது. இன்னும் ஓரிரு மணிநேரத்தில் மாஸ்டர் பட டீசர் சாதனையை முறியடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.