ARTICLE AD BOX
Airtel, Jio, Vi போட்ட போடு.. வெறும் ரூ.100-க்கு 90 நாட்கள்.. மொத்த கஸ்டமர்களும் குஷி.. ஆட்டமே இனிமேதான் போல!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் ரூ.100 விலை கொண்ட திட்டங்களை போட்டிப்போட்டு கொண்ட களமிறங்கி இருக்கின்றன. ஜியோ அறிமுகம் செய்த ஓரிரு நாட்களில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் புதிய திட்டங்களை கொண்டுவந்தன. இந்த டேட்டா மற்றும் ஓடிடி திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐபிஎல் (IPL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடரின் 18ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியுடன் மோதுகிறது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவுக்கு மாற தொடங்கிவிட்டனர்.

இந்த நேரத்தை பயன்படுத்திய டெலிகாம் நிறுவனங்கள் அசல் விலையைவிட மலிவான விலைக்கு 90 நாட்கள் சந்தா கொண்ட திட்டத்தை களமிறக்கி இருக்கின்றன. அதாவது, ஜியோஹாட்ஸ்டார் சந்தாவின் ஆரம்ப விலை ரூ.149ஆக இருக்கிறது. ஆனால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதே 90 நாட்கள் சந்தாவை வெறும் ரூ.100 விலைக்கு களமிறக்கி இருக்கின்றன.
டேட்டா வவுச்சர்களில் இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை கொடுக்கின்றன. ஆகவே, முன்னணி டெலிகாம் நிறுவங்களின் கஸ்டமர்களிடம் வெறும் ரூ.100 இருந்தால் போதும் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெற்று கொள்ளலாம். இது 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் முடியும் வரையில் கஸ்டமர்களுக்கு சந்தாவை கொடுக்க இருக்கிறது.

ஜியோ ரூ 100 திட்ட விவரங்கள் (Jio Rs 100 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி கொண்ட திட்டத்தில் 5 ஜிபி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. டேட்டாவுக்கு 90 நாட்கள் வேலிட்டி மற்றும் ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தா கிடைக்கிறது. இந்த 5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு உங்களுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டம் டேட்டா வவுச்சராக இருப்பதால், உங்களிடம் பேஸ் ஆக்டிவ் திட்டம் (Base Active Plan) இருக்க வேண்டும். அதேபோல 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொண்ட பேஸ் ஆக்டிவ் திட்டத்தை நீங்கள் வைத்திருந்தால், அது முடிந்தவுடன் 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்துவிட வேண்டும். அப்போதுதான் 90 நாட்கள் முழுவதும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெற்று கொள்ள முடியும்.
வோடபோன் ஐடியா ரூ 101 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 101 Plan Details): இந்த வோடபோன் ஐடியா திட்டமும் முந்தைய திட்டத்தை போலவே டேட்டா மற்றும் ஓடிடி சலுகையை கொடுக்கின்றன. ஆனால், 5 ஜிபி டேட்டாவுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு முந்தைய திட்டத்தை போலவே 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 100 திட்ட விவரங்கள் (Airtel Rs 100 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, 5 ஜிபி டேட்டாவுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மூன்று திட்டங்களிலும் மொபைல் சந்தா மட்டுமே கிடைக்கிறது. ரூ.100 விலைக்கு இதுதான் திட்டங்கள்.