ARTICLE AD BOX
Actress Poonam Pandey Video: நடிகை பூனம் பாண்டேவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு ஆண், அவரை லிப் கிஸ் செய்ய முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இதனை மக்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. இந்த நபரின் செயலும் பூனம் பாண்டேவின் புதிய பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், முத்தம் கொடுக்க முயன்ற அந்த ஆணின் விவரங்களும் வெளியாகியுள்ளன.
வைரலாகும் வீடியோ
நடிகை பூனம் பாண்டேவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு ஆண், அவரை லிப் கிஸ் செய்ய முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இது பூனம் பாண்டேவின் புதிய பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த ஆணின் விவரங்களும் வெளியாகியுள்ளன.
பூனம் பாண்டே வைரல் வீடியோ
நடிகை பூனம் பாண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசுவதற்காக வந்து கொண்டிருக்கிறார். அப்போது, ஒரு ரசிகர் அவரிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் எனக் கேட்கிறார். உடனே, பூனம் பாண்டேவும் அந்த ரசிகருக்கு போஸ் கொடுத்து நிற்கிற்கிறார். அப்போது செல்ஃபி எடுக்க வந்த நபர் நடிகையை லிப் கிஸ் செய்ய முயன்றார். அப்போது சுதாரி்த்துக் கொண்ட பூனம் பாண்டே அந்த நபரை தள்ளி விட்டு நடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்கிரிப்டட் வீடியோ?
பலர் இந்த வீடியோவை ஸ்கிரிப்டெட் என்றும் இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்றும் கூறி வருகின்றனர். "எப்போதும் செய்திகளில் இருக்க, பூனம் பாண்டே இதுபோன்ற ஸ்டண்ட்களை பலமுறை செய்துள்ளார். இதுவும் அப்படித்தான்" என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த லிப் கிஸ் செய்த நபர் யார் என்பதை பல்வேறு ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன.
அப்பட்டமாக வெளிவந்த உண்மை
மூவிடாக்கீஸ் என்ற இணையதளத்தின் தகவலின்படி, இந்த சம்பவத்திற்கு காரணமான நபரின் பெயர் தீபக் ராஜ். அவர் ஒரு நடிகரும், காஸ்டிங் டைரக்டரும் ஆவார். பூனம் பாண்டே, இதுபோன்ற நாடகத்திற்காக அந்த நபரை நியமித்திருக்கலாம் என்று பல்வேறு செய்திகள் கூறுகின்றன. தீபக் ராஜின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின்படி, அவர் ஒரு நடிகராக தனது தொழிலைத் தொடங்கியுள்ளார். ஹிந்தி வெப் சீரியல்களில் சில சிறிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
மேலும் படிக்க: கணவரிடம் அடிவாங்கி வேதனைப்படும் நடிகை பூனம் பாண்டே..
பூனம் பாண்டேவின் சம்பவங்கள்
நடிகை பூனம் பாண்டே, மக்களின் கவனம் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றால் தான் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்றும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் தான் இறந்து விட்டதாகவும் விளம்பர் கொடுத்தார். பின், இது ஒரு விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி மக்களிடம் உண்மையை கூறினார். இதனால், பூனம் பாண்டேவிற்கு ஒருவர் முத்தம் கொடுக்க வந்த சம்பவத்தையும் மக்கள் யாரும் நம்பவில்லை.
