ARTICLE AD BOX
Actress Mumtaj: மயிலாடுதுறை மாவட்டத்தில், மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் தான் நடிகையாய் இருந்த போது செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியதுடன், இப்போது கிடைக்கும் பாசத்திற்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
நிறைய பேர் என்ன திட்டிருப்பீங்க
மதரஸா திறப்பு விழாவில் பேசிய மும்தாஜ், "நடிகையா இருந்த நான், உங்க எல்லாரையும் பாத்துட்டு நான் இங்க வந்துட்டேன். என் வாழ்க்கை பத்தியும் நான் என்ன பண்ணிட்டு இருந்தேன்னும் உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். நிறைய பேர் என்ன திட்டிருப்பீங்க. நிறைய பேர் எனக்காக துவா செஞ்சிருப்பீங்க. ஆனா நான் இன்னைக்கு உங்க முன்னாடி வந்து நின்னுட்டு இருக்கேன் பாருங்க. அது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுக்குற விஷயம் என ஆனந்த கண்ணீருடன் சொன்னார்.
சொல்லி கொடுக்க யாரும் இல்ல
மேலும் பேசிய அவர், இதுக்கு முன்னாடி நான் வெளிய போயிட்டு இருக்கும் போது, முஸ்லீம் லேடிஸ் எல்லாம் ஒரு மாதிரி பாப்பாங்க. அதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். என்ன கீழ எல்லாம் ஒரு மாதிரி பாத்தா நான் எப்படி அவங்க முன்னாடி போய் நான் நிப்பேன். ஆனா, இன்னைக்கு உங்களோட அன்பு எனக்கு கிடைக்குது. என் வாழக்கையில என்ன மைனஸ் இருந்தது. என் தலையில எழுதி இருக்கு இந்த மாதிரி எல்லாம் தப்பு பண்ணனும்ன்னு. என் காலத்துல எனக்கு இந்த மாதிரி மதரஸா எல்லாம் இல்ல. எனக்கு சொல்லிக் கொடுக்க யாரும் இல்ல.
மேலும் படிக்க: விளம்பரத்திற்காக இஸ்லாம் மதமா? விளக்கமளித்த நடிகை மும்தாஜ்
அழகா இருக்கீங்கன்னு சொன்னாங்க
நான் சின்ன வயசா இருக்கும் போது அழகா இருக்கீங்கன்னு 4 பேர் சொல்லிட்டாங்கன்னு அதுனால நடிகை ஆகலாமான்னு யோசிச்சேன். ஆனா, மனசு அதை ரொம்ப நாள் வேணும்னு சொல்லல. நான் ஜீன்ஸ், மினி ஸ்கட் போட்டு டான்ஸ் ஆடும் போது எல்லாம் கீழ பாப்பாங்க. அதெல்லாம் என் மனசுக்கு கஷ்டமா இருந்தது. அந்த சமயத்துல நீங்க பர்தா எல்லாம் போட்டுட்டு போகுறத பாக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கும். அந்த சமயத்துல கொஞ்சம் அன்பா யாராவது சொல்லிருந்தா நான் கொஞ்சம் சீக்கிரம் மாறி இருப்பேன். என்ன கோவமா பாத்தவங்க எல்லாம் இப்போ அன்ப குடுக்குறாங்க. அதுக்கு எல்லாருக்கும் நன்றி" எனக் கூறினார். இவர் பேசும் போது பல இடங்களில் கண்ணீர் மல்க பேசினார்.
நடிகை மும்தாஜ்
நடிகை மும்தாஜ், நடிக்க வந்த சமயத்தில் இருந்தே அவருக்கு கவர்ச்சியான உடைகளும், கதாப்பாத்திரங்களுமே வழங்கப்பட்டன. இதனால், அவர் விரைவிலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். மேலும், படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது, குணச்சித்திர வேடங்களில் நடிப்பது போன்ற கதாப்பாத்திரங்களே இவருக்கு கிடைத்தன. இதனால், இவரால் சினிமாவில் பெரிய உயரத்தை எல்லாம் அடைய முடியவில்லை. இவருக்கு உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இருந்த வாய்ப்புகளும் கை நழுவி சென்றது.
மத ஈடுபாடு
இந்த நிலையில் தான் அவர் நடிப்பில் இருந்து முற்றிலும் விலகி, மத ஈடுபாட்டிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டார். பின், தன் உடை, பேச்சு என அனைத்தையும் மாற்றிய அவர், மெக்கா, மெதினா சென்று தன் நிலையை எண்ணி கண்ணீர் மல்க பேசி வீடியோவும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
