ARTICLE AD BOX
Actor Madhavan: சினிமாவில் மாதவனை பயமுறுத்திய இரண்டு விஷயங்கள்.. அட அப்படியா!
சென்னை: நடிகர் மாதவன் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்துவரும் மாதவன் சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்துள்ளார். கடந்த ஆண்டில் பாலிவுட்டில் அஜய் தேவ்கன், ஜோதிகாவுடன் மாதவன் நடிப்பில் ஷைத்தான் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தன்னுடைய 25 ஆண்டுகால பயணம் குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ள மாதவன், ரசிகர்கள் கொடுத்த ஊக்கம் தான் தன்னுடைய இந்த தொடர் வெற்றி பயணத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். தனனுடைய கேரியர் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் மாதவன்: நடிகர் மாதவன் தமிழ். ஹிந்தி என அடுத்தடுத்த மொழி படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள மாதவன் இயக்குநராகவும் ராக்கெட்ரி நம்பி விளைவு படம் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையேயும் திரை துறையினர் இடையேயும் பெற்றிருந்தார். தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் மாதவன் நடிப்பில் கடந்த ஆண்டில் பாலிவுட்டில் ஷைத்தான் படம் வெளியானது.
25 ஆண்டு திரைப்பயணம்: ஷைத்தான் படத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா உள்ளிட்டவர்களுடன் இணைந்து நெகட்டிவ் ரோலில் மாதவன் நடித்திருந்தார். அடுத்ததாக அனன்யா பாண்டே, அக்ஷய் குமாருடன் இணைந்து பாலிவுட்டில் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே, சினிமாவில் 25 ஆண்டுகளை கடந்துள்ளார் மாதவன். இது குறித்து தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ள மாதவன், தான் சினிமாவில் இத்தனை ஆண்டுகளை கடந்ததற்கு ரசிகர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பயணிப்பது எளிதானது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மாதவன் பயந்த இரு விஷயங்கள்: மேலும் சினிமாவில் 25 ஆண்டுகள் கடந்துள்ள தான், இதுவரை இரண்டு முறை அதிகமாக பயந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய முதல் நாள் ஷூட்டிங்கின் போது தான் பயந்ததாகவும் அதேபோல இரண்டாவது படத்தின் ரிலீஸின் போது தான் பயந்ததாகவும் மாதவன் தன்னுடைய பேட்டியில் பகிர்ந்துள்ளார். மிகப்பெரிய ஆளுமையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் வலம் வரும் மாதவனுக்கும் பயந்த தருணங்கள் சினிமாவில் இருந்தது குறித்து அவர் பேசியுள்ளார். இது அவரது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.
மாதவன் பாராட்டு: மேலும் தனது பேட்டியில் மலையாள சினிமா குறித்தும் அவர் பாராட்டுக்களை பகிர்ந்துள்ளார். எந்தவிதமான பெரிய பட்ஜெட்டும் இல்லாமல், நல்ல கதை, வலுவான நடிப்பு மற்றும் நன்கு எழுதப்பட்ட கேரக்டர்களை ரசிகர்களிடையே கொண்டு செல்வதில் மலையாள சினிமா சிறப்பான கவனத்தை செலுத்துவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்த போதிலும் மாதவன் இந்தி சீரியல் மூலமாகவே கவனத்தை பெற்றார். இதையடுத்தே மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அதன் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடிக்கும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது.