ARTICLE AD BOX
Actor jiiva: நடிகர் ஜீவா இப்போது, பாடலாசியர், நடிகர், இயக்குநரான பா. விஜய்யுடன் இணைந்து அகத்தியா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஜீவா, ராஷி கண்ணா, பா. விஜய், ஐசரி கணேஷ் ஆகியோர் இணைந்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்போது, நடிகர் ஜீவா தனது 22 ஆண்டு கால சினிமா அனுபவம் குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார்.
22 வருட சினிமா பயணம்
அந்தப் பேட்டியில், "நான் தமிழ் சினிமாவுக்குள்ள வந்து 22 வருஷம் ஆச்சு. ஆரம்பத்துல இருந்து இப்போ வர எல்லாம் வித்தியாசமான பயணமா அமைஞ்சிருக்கு. என்னோட முதல் 10 வருஷம் ஒரு மாதிரி இருக்கும். அடுத்த 10 வருஷம் ஒரு மாதிரி இருக்கும். 22 வருஷத்துல நான் நிறைய கேரக்டர்ல நிறைய படங்கள் பண்ணிருக்கேன். விதவிதமான எக்ஸ்பீரியன்ஸ். வாழ்க்கையில நிறைய கத்துக்கிட்டேன்.
பெரிய பட்ஜெட் படம் பண்ண பயம்
நான் சினிமாவுல பெரிய பட்ஜெட் படமே பண்ணக் கூடாதுன்னு இருப்பேன். ஏன்னா எனக்கு அது மேல கொஞ்சம் பயம். நான் பண்ணனதுலயே இதுதான் பெரிய பட்ஜெட் படம். நான் ஒரு புரொடியூசர் மகன்ங்குறதுனால பெரிய பட்ஜெட் படம் பண்ணி லாஸ் ஆச்சுன்னா அதெல்லாம் எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும்.
ஒரு படம் நல்லா ஓடுச்சுன்னா ஒரு மைண்ட் செட் நமக்கு பிக்ஸ் ஆகிடும். ஓடலன்னா, அடுத்து அதுல இருந்து எழுந்து வந்து மக்கள் மனச தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம். அந்த அனுபவம் எல்லாம் நிறைய இருக்கு. 2003ல நான் நடிகரா உள்ள வந்தேன். இப்போ 2025 ஆச்சு. இந்த 22 வருஷத்துல நிறைய விஷயம் மாறிடுச்சு. அதுக்கு தகுந்த மாதிரி நாமளும் நம்மள மாத்திக்கணும்.
இவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்
இப்போ எப்படி இருக்குன்னா ஹீரோக்களுக்கு மத்தியில எந்த காம்பிடேஷனும் இல்ல. ஆனா, ஹீரோவோட மார்க்கெட்டிங் டீமோட காம்பிடேஷன் இருக்கு. அவங்க பயங்கரமா வேலை செய்யுறாங்க. அடுத்த இது அடுத்த அதுன்னு செஞ்சிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட தான் ஜாக்கிரதையா இருக்கணும்.
என்னோட போட்டி இவங்க தான்
சிவகார்த்திகேயன் எல்லாம் என்கிட்ட வந்து, நான் ஸ்கூல் படிக்கும் போது உங்க படம் எல்லாம் பாத்திருக்கேன் அண்ணான்னு சொல்லிருக்காரு. அதுனால நாம இப்போ என்ன படம் பண்ணுனாலும் புதுசா என்ன பண்றாங்கன்னு தான் பாப்பாங்க. நான் ஓபனாவே சொல்றேன். சிம்பு, ஜெயம் ரவி, தனுஷ் இவங்க தான் என்னோட காம்பிடேட்டர்ஸ். நான் என் காலத்துல இருக்கவங்கள தான் பாக்குறேன். இப்போ இருக்கவங்க எல்லாம் என் காம்பிடேட்டர்ஸ் கிடையாது. சிவகார்த்திகேயனோ மத்த நடிகரோ எனக்கு காம்பிடேட்டர்ஸ் கிடையாது.
சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு
இன்னும் சொல்லப் போன, என்றென்றும் புன்னகை படத்துல வினய் கேரக்டர் பண்ண சிவகார்த்திகேயன் கிட்ட தான் பேசினோம், அந்த சமயத்துல தான் அவர் மெரினா எல்லாம் பண்ணிட்டு இருந்தாரு. விஜய் சேதுபதி எல்லாம் அப்போ தான் வர ஆரம்பிச்சாங்க. என்கூட வேலை செஞ்சவங்க தான் இப்போ அவங்களோடையும் வேல செய்யுறாங்க.
நான் பெருமைபடுறேன்
நான் நிறைய புதுப்புது டைரக்டர்ஸ இன்டிடியூஸ் பண்ணிருக்கேன். 14, 15 நடிகைகள நான் என் படத்துல இன்டிடியூஸ் பண்ணிருக்கேன். அதுனால இப்போ இருக்க நடிகர்கள பாத்து நான் இன்செக்யூர்டா பீல் பண்ணல. நான் புதுசா ஏதாவது பண்ணனும்ன்னு பாக்குறேன் அவ்வளவு தான். நாம செய்யுற நிறைய விஷயங்கள் பெயில் ஆகும். ஆனா. நான் திரும்ப முயற்சி பண்றேங்குறதுக்காக நான் பெருமை படுறேன்.
எனக்கு கிடைச்ச டைரக்டர்ஸ் காம்பினேஷன்ஸ் மாதிரி எல்லாம் யாருக்கும் கிடைச்சிருக்காது. நான் பிசினஸ் மேன் எல்லாம் இல்ல. நான் நடிகர். நான் கூட்டணி சேருற ஆள பொருத்து தான் அது மாறுது. தமிழ்ல ஒரு நல்ல படம் பண்ணுனா கூட அது பான் இந்தியா படமா மாறுது. நம்மகிட்ட நல்ல சிஸ்டம் இருக்கு" என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்