ARTICLE AD BOX
Aadhaar அட்டையில் மொபைல் நம்பர் மாற்ற வேண்டுமா? எத்தனை முறை மாற்றம் செய்யலாம்? முழு விவரம் இதோ..
இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhaar Card) இல்லாதவர்களைப் பார்க்க முடியாது. அதாவது ஒவ்வொரு இந்தியருக்கு மிகவும் முக்கியமான சான்றாக ஆதார் கார்டு மாறிவிட்டது. அதேபோல் பான் கார்டு, பேங்க் அக்கவுண்ட், டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற ஒட்டுமொத்த ஆவணங்களும் ஆதாருடன் தொடர்பில் இருக்கின்றன. இப்படிபட்ட ஆதார் கார்டில் எத்தனை முறை மொபைல் நம்பரை மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பயன்படும் இந்த ஆதார் தகவல்களை புதுப்பிப்பதற்கு (அப்டேட்) என்று சில வரம்பு உள்ளது. அதுவும் ஒரு சில தகவல்களை ஒரு முறைக்கு மேல் புதுப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே ஆதாரில் அப்டேட் செய்ய விரும்பும் பயனர்கள் இது குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

மொபைல் நம்பர்: ஒரு சிலர் சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றி விடுகின்றனர். இதுபோன்ற சமயங்களில் மொபைல் நம்பரை ஆதார் கார்டில் மாற்றியமைப்பது மிகவும் அவசியம் ஆகும். காரணம் என்னவென்றால் தற்போது அனைத்திற்கும் ஒடிபி சரிபார்ப்பு செயல்முறை செய்யப்படுகிறது. அப்படி செய்கையில் ஆதார் தொடர்புடைய மொபைல் நம்பருக்கு தான் ஓடிபி வரும். எனவே நீங்கள் மொபைல் நம்பரை மாற்றி இருந்தால் கட்டாயம் ஆதார் கார்டிலும் மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக இதற்கு UIDAI எந்த ஒரு வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. அதாவது எத்தனை முறை வேண்டுமானாலும் மொபைல் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
பெயர்: ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்ற விரும்பினால் 2 முறை மட்டுமே இதை செய்ய முடியும். அதாவது பெயரில் எழுத்துப்பிழை ஏற்படலாம். எனவே இதுபோன்ற சமயங்களில் அதை இரண்டு முறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும். குறிப்பாக பெயரை திருத்தம் செய்ய பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக வழங்க வேண்டும்.
பிறந்த தேதி: அதார் கார்டில் பிறந்த தேதியை ஒரு ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். எனவே வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பிறந்த தேதியை மாற்ற முடியும் என்பதால் திருத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முகவரி: ஆதாரில் மொபைல் நம்பர் போன்று முகவரியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அதாவது நீங்கள் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்திருந்தால் அல்லது உங்கள் நிரந்த முகவரி மாறி இருந்தால் கூட ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது
குறிப்பாக ஆதார் அட்டையில் ஒரு சில தகவல்களை ஆன்லைனில் மூலம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சில தகவல்கள் ஆதார் பதிவு மையங்களில் மட்டுமே மாற்ற முடியும். காரணம் என்னவென்றால் அதற்கு பயோமெட்ரிக் அங்கீகாரம் தேவைப்படுகிறது.
மேலும் உங்கள் ஆதார் அட்டையில் வரும் 2025 ஜூன் 14-ம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களை அப்டேட் செய்ய விரும்பினால் செலவின்றி செய்யலாம். ஆனால் ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ஜூன் 14 தேதிக்குப் பிறகு ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்தால் ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதல் செலவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது முன்பு ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் கடைசி தேதி என்று இதற்கு 2024 டிசம்பர் 14-ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள 2025 ஜூன் 14-ம் தேதி தான் கடைசி நாள் ஆகும். எனவே ஆதாரில் இலவசமாக அப்டேட் செய்ய விரும்பினால் இப்போதே செய்வது நல்லது.