ARTICLE AD BOX
A.R.Rahman: உடல்நலக்குறைவு காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
லண்டனில் இருந்து திரும்பிய ரஹ்மான்
இதுதொடர்பாக வெளியான தகவல்களில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பியதாகவும், அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு இருந்ததாகவும் தெரிகிறது. பின்னர், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அப்பல்லோவில் ஆஞ்சியோ சிகிச்சை
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை
ஆனால், இதுவரை அவரது உடல்நிலை குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. மருத்துவக் குழுவினரின் அறிக்கைக்குப் பிறகே இந்தத் தகவல்களை உறுதி செய்யவும் முடியும். அதுமட்டுமின்றி, தற்போது வரை ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தினர் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் குறித்து முதலமைச்சர் ட்வீட்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
