90 நாள் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை அறிமுகப்படுத்திய ஜியோ!

3 hours ago
ARTICLE AD BOX

புதுதில்லி: ஐபிஎல் சீசன் வரவிருக்கும் நிலையில், ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது புதிய ஜியோ சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை ஜியோ நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஜியோ சிம் பயனர்கள் இப்போது முதல் மார்ச் 31, 2025 வரை ரூ.299 (1.5 ஜிபி நாள் ஒன்றுக்கு அல்லது அதற்கு மேல்) அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால், இந்த சலுகையைப் பெற முடியும் என்றது.

மார்ச் 31, 2025 வரை ரூ.299 திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் தற்போதைய ஜியோ சிம் பயனர்கள் இந்த சலுகையைப் பெற முடியும்.

இந்தக் காலகட்டத்தில் ரூ.299 திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அல்லது அதற்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் புதிய ஜியோ சிம் பெறுபவர்களும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் பிரியர்களுக்காக, ஜியோ தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. வெறும் ஜியோ சிம் மற்றும் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டம் மூலம் இந்த சலுகையை அனுபவிக்க முடியும். அதே வேளையில், வீட்டிற்கு 50 நாள் இலவச ஜியோ ஃபைபர் அல்லது ஏர்ஃபைபர் சோதனை இணைப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மார்ச் 17-ம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.100 குடுதல் பேக்கை தேர்வு செய்து கொள்ளலாம். ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல் செயல்படுத்தப்படும்

மார்ச் 17-ம் தேதிக்கு முன் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.100 கூடுதல் பேக்கை தேர்வு செய்து கொள்ளலாம். அதே வேளையில் ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல், அதாவது கிரிக்கெட் சீசனின் தொடக்க போட்டி நாள் முதல் இது நடைமுறைபடுத்தப்படும். இந்த பேக் 90 நாட்களுக்கு செயல்படும்.

இதையும் படிக்க: வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!

Read Entire Article