ARTICLE AD BOX

2021 தேர்தலின் போது திமுக தரப்பில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு வீடுகள் வழங்கி சிறப்புரையாற்றிய முதலமைச்சர், தேர்தலின் போது தாம் உறுதியளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகவும் மீதமுள்ளவற்றையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதையும் முதலமைச்சர் குறிப்பிட்டார். மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள விடியல் பயணம், நம்மைக்காக்கும் 48, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் 2021 திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவைகளாகும்.