90% கோடிங்கை இனி ஏஐ செய்துவிடும்.. ஐடி ஊழியர்களுக்கு பீதியை கிளப்பும் 2 பேர்..!

17 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

90% கோடிங்கை இனி ஏஐ செய்துவிடும்.. ஐடி ஊழியர்களுக்கு பீதியை கிளப்பும் 2 பேர்..!

News

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 90 சதவீத கோடிங்கை எழுதி விடும் என்பதால் எதிர்காலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கான தேவை இருக்காது என இந்த துறை சார்ந்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் செய்து வரக்கூடிய கோடிங் வேலையை 90% வரை கையில் எடுத்துக் கொள்ளும் என சொல்லப்படுகிறது. ஸோஹோ நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல அதிகாரி சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட இந்த துறை சார்ந்த தலைவர்கள் பலரும் இதே கருத்தை தான் தெரிவித்துள்ளனர்.

90% கோடிங்கை இனி ஏஐ செய்துவிடும்.. ஐடி ஊழியர்களுக்கு பீதியை கிளப்பும் 2 பேர்..!

ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 90% கோடிங்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே எழுதிவிடும் என்ற கூற்றை நான் முழுமையாக ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார. புரோகிராமிங்கில் essential complexity மற்றும் accidental complexity என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. Mythical Man Month என்ற சாப்ட்வேர் இன்ஜினியரிங் தொடர்பான புத்தகத்தில் இருக்கும் கருத்தாக்கத்தை தன்னுடைய பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த accidental complexity எனப்படும் தற்செயலான சிக்கலை நீக்கும் வேலையை சிறப்பாக செய்கிறது எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த essential complexity எனப்படும் இன்றியமையாத சிக்கல்களை மனிதர்களால் தான் தீர்க்க முடியும் என கூறியிருக்கிறார். எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே மனிதர்கள் உருவாக்கிய விஷயங்களையே தான் செய்யும் எனவும் புதிய விஷயங்களையும் கண்டுபிடிக்க வேண்டியது மனிதர்களின் பங்காகவே இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவையை குறைத்து விடும் எனக் கூறியிருக்கிறார். உடனடியாக இந்த மாற்றத்தை நாம் காண முடியாது ஆனால் அதை நோக்கி தான் நாம் பயணம் செய்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனங்களுக்கு கோடிங் எழுதும் பணிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடமே வழங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரிந்து 50 சதவீத நிறுவனங்கள் கோடிங் வேலைகளை முற்றிலும் ஏஐ சார்ந்ததாக மாற்றி விட்டன என தெரிவித்துள்ளார்.

Anthropic நிறுவனத்தின் தலைமை செய்த அதிகாரி டேரியும் அடுத்த ஓராண்டுக்குப் பிறகு பார்க்கும்போது அனைத்து வகையான மென்பொருள் கோடிங்கையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே எழுதி விடும் என கூறியிருக்கிறார். முன்னதாக மெடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க்கும் இதே கருத்தை கூறி இருந்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நொடிக்கு நொடி மாற்றம் அடைந்து வருகிறது இந்த நிலையில் மென்பொருள் பொறியாளர்கள் பணிகளை அவை எடுத்து கொள்ளும் என்றாலும் அவற்றை மேற்பார்வை செய்து சரி செய்ய வேண்டிய பணிகள் மனிதர்களுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.

Read Entire Article