82 வயதிலும் கெத்து.. வருமான வரியாக மட்டும் ரூ.120 கோடி செலுத்திய நடிகர்.. யார் அந்த ஸ்டார்?

15 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

82 வயதிலும் கெத்து.. வருமான வரியாக மட்டும் ரூ.120 கோடி செலுத்திய நடிகர்.. யார் அந்த ஸ்டார்?

News

மும்பை: 2024 - 25ஆம் நிதி ஆண்டில் அதிக வருமான வரி செலுத்திய நடிகர் என்ற பெருமை அமிதாப்பச்சனுக்கு கிடைத்திருக்கிறது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராக இருப்பவர் அமிதாபச்சன். இந்தி, தமிழ் என பல்வேறு திரையுலகங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இவர் கொண்டு இருக்கிறார்.

82 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் . அண்மையில் வெளியாகி இருக்கக்கூடிய ஒரு தகவலின் படி 2024-25 ஆம் நிதி ஆண்டில் இவர் 350 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிருப்பதாகவும் இதற்காக இவர் 120 கோடி ரூபாயை வருமானவரி ஆக செலுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகபட்ச வருமான வரி செலுத்திய சினிமா பிரபலம் என்ற பெருமை அமிதாப்பச்சனுக்கு கிடைத்திருக்கிறது.

82 வயதிலும் கெத்து.. வருமான வரியாக மட்டும் ரூ.120 கோடி செலுத்திய நடிகர்.. யார் அந்த ஸ்டார்?

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் அதிகபட்ச வருமான வரி செலுத்திய நபராக இருந்தார். கடந்த நிதியாண்டில் இவர் 92 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தி இருந்தார். அமிதாப்பச்சன் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பு, பல்வேறு பிராண்டுகளுக்கான விளம்பர தூதராக செயல்படுவது, பல நிறுவங்களில் முதலீடு என பல வழிகளில் இவருக்கு வருமானம் கிடைக்கிறது.

82 வயதான போதிலும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுக்கு அமிதாப்பச்சன் நடித்தால் தான் சரியாக இருக்கும் என பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவரை பதிவு செய்கின்றன. இது தவிர கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு பல வழிகளில் இவருக்கு வருமானம் கிடைக்கிறது.

அது மட்டும் இன்றி இவர் மார்ச் 15ஆம் தேதி அட்வான்ஸ் வரியாக 52.50 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறாராம். ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரி செலுத்தியாக வேண்டும் என்பதில் அமிதாப்பச்சன் தன்னுடைய ரசிகர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக அமிதாப்பச்சன் இருக்கிறார் என பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

தற்போது அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் 16வது சீசனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். அண்மையில் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையின் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கல்கி திரைப்படத்தில் பிரபாஸ் தீபிகா படுகோனே ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் . அடுத்ததாக இவர் செக்சன் 84 என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல கல்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார். அமிதாப்பச்சன் 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சொந்தமாக குடியிருப்புகளை வாங்கு வைத்திருக்கிறார்.

Read Entire Article