ARTICLE AD BOX
தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் 8 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்ல நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வருகை தந்த சின்னசாமி என்பவரது மகன் கண்ணன், மாணவியிடம் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி இருக்கிறார்.
இதனால் சிறுமியுடன் அவரிடம் சென்றுள்ளார். அப்போது, சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்
வீடு திரும்பிய சிறுமி, பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: #Breaking: பிரபல ரௌடி குறுந்தையன் 2 பேர் கும்பலால் வெட்டிக்கொலை; பழிக்குப்பழியாக பயங்கரம்.. தஞ்சாவூரில் பரபரப்பு.!
புகாரை ஏற்ற காவல்துறையினர் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கண்ணன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: Thanjavur: "அங்கிள் தின்பண்டம் வாங்கி கொடுக்குறேன் பாப்பா" - 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இருவர் அதிர்ச்சி செயல்.!