8 சதவிகிதம் உயர்ந்து முடிந்த ரயில்டெல் பங்குகள்!

4 hours ago
ARTICLE AD BOX

பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரெயில்டெல் நிறுவனம் ரூ.16.8 கோடி ஆர்டரைப் பெற்றதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்கின் விலை 8 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

என்.எஸ்.இ-யில் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்குகள், இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் 8.12 சதவிகிதம் உயர்ந்து ரூ.321.65 ஆக உள்ளது. அதே வேளையில், கடந்த 4 நாள் அமர்வில், பங்கின் விலை 12 சதவிதம் வரை உயர்ந்து முடிந்துள்ளது.

ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இடும் பணிக்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரூ.16,89,38,002 பணி ஆணையைப் பெற்றுள்ளதாக, ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்தது. இது அனைத்து வரிகள் உள்பட என்றும், இந்த திட்டம் மார்ச் 2026க்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேச மின்னணு மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.37 கோடி பணி ஆர்டரைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

2024 டிசம்பரில், நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.65.05 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.86ஆக முடிவு!

Read Entire Article