ARTICLE AD BOX

குஜராத் மாநிலத்தின் பானாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவி, 16 மாதங்களாக ஏழு பேரால் மிரட்டப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ல், பாலன்பூர் நகரில் கல்லூரி சேர்ந்த 20 வயதுடைய மாணவியுடன், விசால் சவுதரி என்பவர் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகினார். நவம்பர் 2023-ல், மாதம் கடந்தபின், ஒருநாள் காலை உணவிற்கு அழைத்து சென்ற பின்னர், உடை மாசடைந்ததாகக் கூறி, அதை சுத்தம் செய்யும் நேரத்தில், திருட்டுத்தனமாக அறைக்குள் நுழைந்து, மாணவியின் நிர்வாண வீடியோவை பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை காட்டி, மிரட்டி, தொடர்ந்து அவருடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தினார் என மாணவி புகார் அளித்துள்ளார். இதற்குப் பிறகு, அதே வீடியோவை தனது நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்கள் அனைவரும் மாணவியை பல்வேறு இடங்களில் உடல் உறவிற்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது. நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2025 வரை, அந்த மாணவி பல இடங்களில் மிரட்டப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக முதன்மைக் குற்றப்பத்திரிகை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விசால் சவுதரி உட்பட 6 அடையாளம் காணப்பட்டவர்கள் மற்றும் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மாணவியின் நிலைமை மோசமாக உள்ளதால், காவல்துறை குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்காக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று பாலன்பூர் தாலுகா காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.