650 டன் எடை! தமிழ்நாடு டூ கொல்கத்தா 1,600 கிமீ பயணம்! நாட்டின் மிகப்பெரிய துளையிடும் இயந்திரம்!

4 hours ago
ARTICLE AD BOX

India's Largest  tunnel boring machine: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் புதிதாக பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் சில வழித்தடங்கள் சுரங்கப்பாதையாக அமைய உள்ளன. இந்நிலையில்,  சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை தொடங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய துளையிடும் இயந்திரம் கொல்கத்தாவிற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு டூ கொல்கத்தா பயணம்

இந்த துளையிடும் இயந்திரம் தமிழ்நாட்டின் அலிஞ்சிவாக்கத்திலிருந்து 1,653 கி.மீ பயணத்திற்குப் பிறகு கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய துளையிடும் இயந்திரமான இது 
90 மீ நீளமும், சுமார் 650 டன் எடையும் கொண்டதாகும். கொல்கத்தாவின் கிடர்பூர் முதல் பார்க் தெரு வரை சுரங்கப்பாதை துளையிடும் பணிகளை இந்த பிரம்மாண்ட இயந்திரம் மேற்கொள்ள இருக்கிறது. 

சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம்

சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் (TBM)என்பது கடினமான பாறை, ஈரமான அல்லது வறண்ட மண் அல்லது மணல் வழியாக சுரங்கப்பாதைகளை தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பூமி அழுத்த சமநிலை (EPB) இயந்திரங்கள் ஆகும். இந்த உயர்ந்த தொழில்நுட்பம், முன்கூட்டிய பிரிவு வளையங்களுடன் சுரங்கப்பாதைகளை துளையிடவும் கட்டவும் அனுமதிக்கிறது.

ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு! இந்திய ரயில்வேயில் புதிய விதி!

சென்னை அருகே அசெம்பிள் செய்யப்பட்டது 

இந்தியாவில் சென்னை உள்பட சில மாநிங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் நிலையில், சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை ஜெர்மனி தயாரித்து வழங்குகிறது. மொத்தம் மூன்று ஜோடி  துளையிடும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதில் இரண்டு சென்னை அருகே உள்ள  அலிஞ்சிவாக்கத்தில் அசெம்பிள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துளையிடும் இயந்திரங்களில் 4 பாகங்கள் 

இந்த ராட்சத துளையிடும் இயந்திரங்களில் கட்டர் ஹெட் (மண்ணைத் தோண்டி எடுக்கும்), மேன்லாக் (தொழிலாளர்கள் சுரங்கப்பாதை துளைப்பானை உள்ளே அணுக வைக்கிறது), மெட்டீரியல் லாக் (ஹைட்ராலிக் முறையில் தோண்டப்பட்ட பொருளை அகற்றுகிறது) மற்றும் உந்துவிசை அமைப்பு (மின்சாரத்தை வழங்கும் ஹைட்ராலிக் சிலிண்டர்களைக் கொண்டது) என 4 முக்கியமான பாகங்கள் உள்ளன. 

கொல்கத்தா மெட்ரோ பணிகள் 

கொல்கத்தாக்கு கொண்டு வரப்பட்ட துளையிடும் இயந்திரங்கள் பர்பிள் லைனின் செயிண்ட் தாமஸ் முதல் விக்டோரியா வரை 1.7 கி.மீ. தூரத்துக்கும், இரண்டாவது பாதை விக்டோரியாவிலிருந்து பார்க் தெரு வரை 950 மீ தூரத்திலும் சுரங்க்பாதைகளை துளையிட இருக்கிறது. கொல்கத்தாவில் ஜோகா மற்றும் எஸ்பிளனேடை 12 நிலையங்கள் வழியாக இணைக்கும் 14 கி.மீ மெட்ரோ வழித்தடத்தில் சுமார் 5 கி.மீ சுரங்கப்பாதையில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

சில நிமிடங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! இந்த ஐடியா ட்ரை பண்ணுங்க!

Read Entire Article