60/5 டூ 190/7 ரன்ஸ்.. நான் பவர் ஹிட்டராக உலகின் சிறந்த கேப்டன் தோனி தான் கரணம்.. 2016 பின்னணி பற்றி பெரேரா

19 hours ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார். 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விடைபெற்ற அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தம்மால் அதிரடியாக விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையை தோனி கொடுத்ததாக முன்னாள் இலங்கை வீரர் திசாரா பெரேரா கூறியுள்ளார். 2016, 2017 காலகட்டங்களில் புனே அணிக்காகவும் அதற்கு முன் சென்னை அணிக்காக ஓரிரு வருடங்களும் தோனி தலைமையில் அவர் விளையாடியுள்ளார். அப்போது மற்றவர்களைக் காட்டிலும் தோனி தன்னுடைய பவர் ஹிட்டிங்கை அதிகம் நம்பியதாக பெரேரா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெரேரா பெருமிதம்:

அதைப் பயன்படுத்தி தோனியுடன் சேர்ந்து ஒரு போட்டியில் புனேவுக்காக 190 ரன்கள் அடித்தது பற்றி பெரேரா நினைவு கூர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும் போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார்”

“அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 – 25 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு தருணமும் எனக்கு நினைவிருக்கிறது. அது புனே அணிக்காக விளையாடிய போட்டியாகும். அந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 – 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம்”

உலகின் சிறந்த கேப்டன் தோனி:

“அந்த சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள்களை எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது. அந்த குழப்பமான நிலையுடன் நான் தடுப்பாட்டத்தை விளையாடினேன். அப்போது என்னிடம் வந்த எம்எஸ் “பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன்”

இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் முக்கியமா? இல்ல நான் சாப்பிட்டது முக்கியமா? தொலைக்காட்சி சேனல்களை சாடிய கோலி

“அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார். அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள் கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடிததேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார். தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார்” என்று கூறினார்.

The post 60/5 டூ 190/7 ரன்ஸ்.. நான் பவர் ஹிட்டராக உலகின் சிறந்த கேப்டன் தோனி தான் கரணம்.. 2016 பின்னணி பற்றி பெரேரா appeared first on Cric Tamil.

Read Entire Article