50 வயதை நெருங்கி விட்டீர்களா அப்பா அலர்ட்டா இருங்க அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

2 hours ago
ARTICLE AD BOX

உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை எது என்று கேட்டால் நம்மில் பலரும் நிலம் வீடு தங்கம் என பலவற்றை சொல்வார்கள் ஆனால் உண்மையான சொத்து நமது உடல் ஆரோக்கியம் மட்டுமே. இதற்கு நிகரான சொத்து எதுவுமில்லை ஆரோக்கியம் தரும் மகிழ்ச்சிக்கு நிகரான சந்தோஷம் எதுவும் இல்லை….

ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனம் தொடர்புடையது. சிலர் அதிக உணவு பிரியர்களாக இருப்பார்கள் இது இயல்பான ஒன்றுதான் அதில் தவறில்லை. ஆனால் 40 வயதை நெருங்கியதும் ஒருவர் தனது உணவை கட்டுப்படுத்தி சாப்பிட்டு தொடங்க வேண்டும். இது மிகவும் முக்கியம். 40 வயதிலேயே நமது கட்டுப்பாட்டுக்குள் நமது உணவு வந்துவிட வேண்டும் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் அது குறைக்க வேண்டும். அசைவத்தில் வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பு வைத்து சாப்பிடலாம் இதனால் பயன்படுத்தும் எண்ணையின் அளவு கணிசமாக குறையும். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிட பழகுங்கள் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான விஷயம். கடைகளில் பழைய அசைவ பொருட்களை பயன்படுத்தலாம் சுவை கூட்ட ஏதேனும் பொருட்களை சேர்க்கலாம் அவர்களை பொறுத்தவரை வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். நமது ஆரோக்கியம் என்பது அவர்களை பொறுத்தவரை இரண்டாம் பட்சம் தான்…

முறையும் அரை வயிறு அளவிற்கு சாப்பிடலாம். இதில் ஒரு முக்கியமான இருக்கும் நன்மை என்னவென்றால் சாப்பிட்டு உணவு எளிதில் ஜீரணம் ஆகும். காலை வேலைகளில் ஓரளவிற்கு வயிறு நிறைவாக உண்ண வேண்டும். இரவு முதல் காலை வரை சுமார் 10 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்போம் அதனால்தான் காலை உணவை தவிர்க்காமல் நன்றாக சாப்பிட வேண்டும் என்பார்கள். காலை உணவில் பாதி அளவே மதியம் சாப்பிட வேண்டும் இரவு உணவை மிகவும் குறைவாக உண்ண வேண்டும். அதையும் இரவு 8:00 மணிக்கு சாப்பிட்டு பழக வேண்டும் சாப்பிட்ட பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்து தூங்க செல்ல வேண்டும்..

தினந்தோறும் காலை வேலைகளில் கட்டாயம் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள் இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சைக்கிள் ஓட்டுவதில் விருப்பம் இருந்தால் அது செய்யுங்கள் அரை மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டினால் போதும் நல்ல பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கோபம் நிச்சயம் உங்கள் ஆயுளை குறைக்கும் எல்லோரிடம் அன்பாக இருக்க பாருங்கள் தினமும் யாராவது ஒரு உறவினரிடம் தொலைபேசியில் உரையாடும் வழக்கத்தை கடைபிடியுங்கள் எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள். பிறந்து விட்டோம் வாழ்ந்து தான் ஆக வேண்டும் பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தவரை உதவி செய்து பழகுவோம்..!!

Read Entire Article