ARTICLE AD BOX
விஜய் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்தாலும், அவ்வப்போது, புதிய சீரியல்கள் ஒளிபரப்பவது வழக்கம். அதே சமயம், பழைய சீரியல்கள், மேற்கொண்டு கதை நகர்த்த முடியாமல், ஏற்கனவே வந்த காட்சிகளே மீண்டும் வரும்போது, சீரியல்கள், ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதே சமயம் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வீஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட புதிய சீரியல் தான் தனம். ஸ்ரீகுமார் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா ஆகியோர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலுக்கான ப்ரமோவில் ஸ்ரீகுமார் தனது மனைவியிடம் முதலிரவில் தனது கடமைகள் பற்றி சொல்ல, அவர் நாம் இருவரும் சேர்ந்து இந்த பணியை செய்யலாம் என்று சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீகுமார் இறந்துவிட, அவரின் குடும்பத்தை காப்பாற்ற, தனம் (சத்யா தேவராஜன்) களமிறங்குகிறார். ஆனால் மாமியாரிடம் அவருக்கு மரியாதை இல்லை. இதை தனமும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கணவரின் குடும்பத்தை காப்பாற்ற, மனைவி ஆட்டோ ஓட்டுகிறார். இந்த சீரியல் கடந்த பிப்ரவரி 17ந் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே சீரியல் குழுவினர், செய்த ஒரு செயல் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் சத்யா ஆட்டோ ஓட்டுனர் என்பதால், இந்த சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து அறுசுவை விருந்து வைத்து அசத்தியுள்ளனர். தொடர்ந்து, அவர்களுடன் சீரியல் குழுவினர் ஜாலியாக விளையாடி மகிழ்ந்துள்ளனர். சீரியல் குழுவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.