ARTICLE AD BOX
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரகத்திற்கு உள்பட்ட, ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, வயது 10. இந்த மாணவி பள்ளியில் அடிக்கடி சோர்வாக இருந்துள்ளார். இதை கவனித்த பெண் ஆசிரியர் ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறாய், உடம்புக்கு என்ன செய்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் ஆசிரியர் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து பள்ளிக்கு வர வைத்துள்ளார். இதையடுத்து பெற்றோரை வைத்து கொண்டு ஆசிரியை கேட்டுள்ளார். அப்போது, மாணவி அழுதுகொண்டே இரண்டு பேர் என்னிடம் தப்பாக நடக்கின்றனர் என்றுள்ளார். இதில் அதிர்சியடைந்தவர்கள், மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதியானது.
பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..இதைகேட்டு கதறிய சிறுமியின் பெற்றோர், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ்(35), முகிலரசன்(40) என்கிற இருவரையும் கடந்த 7-ம் தேதி போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளன.
இது குறித்து சிலரிடம் பேசினோம், "ராஜேஷ், முகிலரசன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். வேலை வெட்டிக்கெல்லாம் செல்வதில்லை. சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். இதனால் வேலைக்காக வெளியே சென்று விடுவர். இந்த நிலையில், அந்த சிறுமிக்கு பிஸ்கட், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நாங்க இப்படி செய்றதை வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி இதை யார்கிட்டேயும் சொல்லாமல் இருந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் சிறுமிக்கு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என்றனர்.
“பாதுகாப்பும் இல்லை, நீதியும் இல்லை!” - கதறும் சிறார்கள், தப்பும் குற்றவாளிகள்!- கண்துடைப்பு போக்சோ!