5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

3 hours ago
ARTICLE AD BOX

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந்தியாவைச் சேர்ந்த இவர், பாஜக அமைப்பு ஒன்றை ஆஸ்திரேலியாவில் நிறுவி அதனை நிர்வகித்து வருகிறார். மேலும் பாலேஷ் தன்கர் இந்து மத ஆணையத்தின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். 43 வயதான இவர், போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களைக் கொடுத்து பெண்களை தனது வீட்டிற்கு வரவழைத்து மயக்க மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

பாலேஷ் தன்கர்.

அப்படி வீடியோவாக பதிவு செய்யப்பட்டதைத் தனது கணினியில் எக்ஸ்சல் சீட்டில் பட்டியல் போட்டு அவர்களின் வயது, திறமை என தனித்தனியாக மதிப்பெண் கொடுத்து வந்திருக்கிறார். இதனை வாடிக்கையாகவே வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலேஷ் தன்கர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிட்னியில் உள்ள பாலேஷ் தன்கருக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில் மயக்க மருந்து மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தபட்ட ரகசிய கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து வேலை தேடி வந்த 5 கொரிய பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அனைவரும், வன்கொடுமை செய்யப்படும் போது, மயக்கத்தில் இருந்தனர் என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே மேலும் 8 பாலியல் வழக்குகள் பாலேஷ் தன்கர் மீது சுமத்தப்பட்டது.

மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு 13 பாலியல் வழக்குகள் உள்பட 33 குற்ற வழக்குகளில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி டவுனிங் சென்டர் நீதிமன்றம் பாலேஷ் தன்கருகுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, 30 ஆண்டுகளுக்கு பிணை வழங்கப்படாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேல் சுற்றுலாப் பயணி; கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article