ARTICLE AD BOX
கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. 0.25% குறைக்கப்பட்டு ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 முறை நடந்த ரிசர்வ் வங்கியின் நாணயக்கொள்கை கூட்டத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வங்கிகளில் கார், வீடு லோன் வாங்கியிருப்பவர்களுக்கு இந்த வட்டி விகிதம் குறைப்பு அவர்கள் மாதம் கட்டவேண்டிய emi-ல் குறிப்பிட்ட தொகை குறைய வழிவகை செய்யும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைப்பது அல்லது அதிகரிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அண்மையில்கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன், பர்சனல் லோன், கார் லோன் உள்ளிட்ட வங்கி கடன்களின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம் முக்கிய பங்காற்றுகிறது. ரெப்போ விகிதத்தைப் பொறுத்தே கடன்களுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என்பதால்,emi-ல் வீடு,கார்,பர்சனல் லோன் வாங்கியவர்களுக்கு மாதம் அவர்கள் கட்டவேண்டிய emi தொகை குறைய வாய்ப்பு இருக்கிறது.