ARTICLE AD BOX
4 நிமிடங்களில் நேர்காணலுக்கு “YES” சொன்ன சத்ய நாதெல்லா - அப்படி அந்த மின்னஞ்சல்ல என்ன இருந்தது?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா அவ்வளவு எளிதாக யாருக்கும் பேட்டி கொடுக்க முன்வர மாட்டார். ஆனால் அவர் ஒரு யூடியூபருக்கு பேட்டி அளிப்பதற்கு முன்வந்துள்ளார். அதுவும் நான்கே நிமிடங்களில் தான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு அவர் சரி என பதில் அனுப்பி இருப்பதாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துவாரகேஷ் பட்டேல் என்ற யூடியூபர் தெரிவித்துள்ளார்.
துவாரகேஷ் பட்டேல் என்பவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கக்கூடிய அவர் துவாரகேஷ் பட்டேல் என்ற பெயரில் யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இதில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களையும் பேட்டி கண்டு வெளியிட்டு வருகிறார் .அந்த வகையில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவை நேர்காணல் செய்ய வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அவருடைய மின்னல்களுக்கு சத்ய நாதெல்லா நான்கே நிமிடங்களில் சரி என பதில் அளித்துள்ளார்.

இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள துவாரகேஷ், நேர்காணலில் கலந்து கொள்ளும்படி தான் அனுப்பிய மின்னஞ்சலையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில் சத்ய நாதெல்லா தன்னுடைய பாட்கேஸ்ட் மற்றும் நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்திருப்பதை பார்த்துள்ளார் துவாரகேஷ் பட்டேல்.
உடனடியாக சத்ய நாதெல்லாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி என்னுடைய நேர்காணலில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம் . அதில் "வணக்கம் சத்யா நீங்கள் என்னுடைய நியூஸ்லெட்டரை சப்ஸ்கிரைப் செய்திருப்பதை பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய பாட்காஸ்டில் கலந்து கொள்வதற்கு உங்களுக்கு விருப்பமா? இதற்கு முன்பு நான் மார்க் ஜக்கர்பெர்க், டோனி பிளேர் உள்ளிட்டோரை என்னுடைய பாட்காஸ்டில் பேட்டி எடுத்துள்ளேன். நீங்கள் ஒப்புதல் தெரிவித்தால் நாம் மைக்ரோசாஃப்ட் மற்றும் மைக்ரோசாப்டின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசலாம்" எனக் கூறியிருந்தார்.
அவருடைய இந்த மின்னஞ்சலுக்கு பதில் அளித்துள்ள சத்யநாதெல்லா உங்களுடைய பாட்காஸ்டுகள் சிறப்பாக உள்ளன. நான் கலந்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக பதிவிட்டுள்ள துவாரகேஷ் பட்டேல், தற்போது வளர்ந்து வரக்கூடிய கண்டன்ட் கிரியேட்டர்களும் பாட்காஸ்ட் கிரியேட்டர்களும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாதீர்கள் யாரிடமாவது பேட்டி எடுக்க வேண்டும் என விரும்பினால் தயக்கம் காட்ட வேண்டாம் உடனடியாக அந்த மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் எதிர்வினை எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.
துவாரகேஷின் மின்னஞ்சலுக்கு சத்ய நாதெல்லா உடனடியாக பதில் அளித்து இருப்பதை பலரும் பாராட்டியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு சத்ய நாதலாவின் இந்த பண்பு முக்கிய காரணம் என்றும் சத்யநாதன் தலைமைத்துவம் முக்கிய காரணம் என்றும் பலரும் புகழ்ந்துள்ளனர். சத்ய நாதெல்லா நேர்காணலுக்கு வர ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம், துவாரகேஷ் ஏற்கனவே பேட்டி எடுத்த நபர்களின் பட்டியல் தான் என சில பயனர்கள் கருத்து கூறியுள்ளனர்.
Story written by: Devika