ARTICLE AD BOX

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு அரசு பணியில் சேரும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் என்று ஒவ்வொரு பணியாளர்களும் சுமார் 43 நாட்கள் அடிப்படை பயிற்சியை பெற வேண்டும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 66 வது அடிப்படை பயிற்சி வகுப்பில் 80 கணினி மூலம் புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஐஏஎஸ் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டிருப்பதால் ஐஏஎஸ் தேர்ச்சியை அதிகரிக்க நான் முதல்வன் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த வருடம் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முதலமைச்சர் திட்டமிட்டதில் தற்போது வரை 60 ஆயிரம் பேருக்கு டிஎன்பிஎஸ்சி மற்றும் எம்ஆர்பி மூலமாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 4 ஆயிரம் பேருக்கு தற்போது கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார்.