383 கோடி செலவு.. இந்தியாவால் வெறும் 5 நாட்களில் பரிதாபமாக நொறுங்கிய பாகிஸ்தானின் 29 வருட கனவு

2 days ago
ARTICLE AD BOX

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் முகமது ரிஸ்வான் தலைமையில் விளையாடியது. ஆனால் அந்தத் தொடரில் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து துபாயில் பரம எதிரி இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் சுமாராகவே விளையாடியது. அந்தப் போட்டியில் வெறும் 242 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி சதத்தை அடித்து வெற்றி பெற வைத்தார். அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

29 வருட கனவு:

மறுபுறம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் தனது கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அத்துடன் நியூசிலாந்து தன்னுடைய கடைசி 2 போட்டிகளில் வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளிடம் தோற்க வேண்டும். அப்படி நடைபெற்றால் செமி ஃபைனலுக்கு செல்லலாம் என்ற பரிதாப நிலைக்கு pakis தள்ளப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.

அதன் காரணமாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அதிகாரப்பூர்வமாக செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றன. மறுபுறம் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் கடைசி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரிலிருந்து நாக் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டது. கடைசியாக 1996 ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் நடத்தியது.

நொறுக்கிய இந்தியா:

அதன் பின் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் ஐசிசி தொடர்கள் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் அந்த தடைகளை உடைத்த பாகிஸ்தான் 29 வருடங்கள் கழித்து ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை தங்களுடைய சொந்த மண்ணில் நடத்தியது. அதற்காக 383 பாகிஸ்தான் கோடி ரூபாய்கள் மதிப்பில் அந்நாட்டில் உள்ள மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன.

இதையும் படிங்க: 112 ரன்ஸ்.. ரவீந்திரா உலக சாதனை.. வங்கதேசத்துடன் பாகிஸ்தானை நாக் அவுட் செய்து செமி ஃபைனலில் நியூஸிலாந்து

அதனால் 29 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் கனவுடன் களமிறங்கியது. ஆனால் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கிய இந்தத் தொடரில் பிப்ரவரி 24ஆம் தேதியே பாகிஸ்தான் நாக் அவுட் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு நேற்று துபாயில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சந்தித்த தோல்வி முக்கிய காரணமானது. அந்த வகையில் பாகிஸ்தானின் 29 வருட கனவை வெறும் 5 நாட்களில் இந்தியா சல்லி சல்லியாக நொறுக்கியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார்கள்.

The post 383 கோடி செலவு.. இந்தியாவால் வெறும் 5 நாட்களில் பரிதாபமாக நொறுங்கிய பாகிஸ்தானின் 29 வருட கனவு appeared first on Cric Tamil.

Read Entire Article