ARTICLE AD BOX
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்பில்..
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.
30 லட்சம் உழவர்களுக்கு பயிர்க் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காவிரி படுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவர் நல மையங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மானாவரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ரூ.2,000 மானியமாக வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக் கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
2023 - 24ஆம் ஆண்டில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.3.58 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுளள்து என்று அறிவித்தார்.